Home /News /business /

Gold Rate : சரிந்தது தங்கம் விலை.. இன்றைய (ஆகஸ்டு 3, 2022) நிலவரம்

Gold Rate : சரிந்தது தங்கம் விலை.. இன்றைய (ஆகஸ்டு 3, 2022) நிலவரம்

தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலை நிலவரம்

Gold Rate today : சென்னையில் தங்கம் விலை இன்று (ஆகஸ்டு 3, 2022) கிராம் ஒன்றுக்கு 18 ரூபாயும், சவரணுக்கு 144 ரூபாயும் குறைந்துள்ளது.

    தங்கத்தின் விலை கடந்த சில மாதமாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த மாதம் ஜூலை முதல் நாள், மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

    இந்திய மக்களிடம் தங்கத்தின் மீதான மோகம் அதிகமாக உள்ள நிலையில், தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்து வருகிறது. சென்னையில் நேற்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ரூ.38,560க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்படி கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, 4,820 ரூபாய்க்கு விற்பனையானது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் அடிப்பெருக்கு தினமான இன்று, 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.18 சரிந்து 4,802 ரூபாயாக, சவரனுக்கு ரூ.144 அதிகரித்து 38,416 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

    Must Read : ஆடிப்பெருக்கு 2022 : காவிரி, கொள்ளிடம் படித்துறைகளில் குவிந்த மக்கள்

    வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 60 பைசா குறைந்து ரூ.63.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 63,000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Gold, Gold Price, Gold rate

    அடுத்த செய்தி