Home /News /business /

Today Gold Rate : தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை... இன்றைய (ஆகஸ்ட் 19, 2022) நிலவரம்

Today Gold Rate : தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை... இன்றைய (ஆகஸ்ட் 19, 2022) நிலவரம்

தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலை நிலவரம்

Gold Rate Today : தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.48 குறைந்த நிலையில், இன்றும் விலை குறைந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    தங்கத்தின் விலை கடந்த சில மாதமாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த ஜூலை முதல் நாள், மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. அதன் பின்னர் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

    தங்கத்தின் விலை நேற்று 4வது நாளாக குறைந்தது. அதன்படி, சவரன் ரூ.48 குறைந்து ரூ.38,704க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,838க்கு விற்பனையானது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து, சவரன் 38,576 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு கிராம் தங்கம் 28 ரூபாய் குறைந்து ரூ.4,822க்கு விற்பனையாகிறது.

    Must Read : சிவகங்கையில் அனுமதியின்றி செயல்படும் 40 டாஸ்மாக் பார்கள்.. அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு- ஆர்டிஐ தகவல்

    இதேபோல, ஒரு கிராம் வெள்ளி 80 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி 62.00 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.62,000க்கு விற்பனையாகிறது. தொடர் விலை குறைவால் வாடிக்கையாளர்கள் மகிழ்சி அடைந்துள்ளனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Gold, Gold Price, Gold rate

    அடுத்த செய்தி