ஹோம் /நியூஸ் /வணிகம் /

Gold Rate | மீண்டும் குறைந்தது தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன?

Gold Rate | மீண்டும் குறைந்தது தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன?

மாதிரி படம்

மாதிரி படம்

Gold Rate | சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூபாய். 32 குறைந்து ரூ.40,128க்கு விற்பனை செய்யப்படுகிறது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தங்கம் விலை 8 மாதங்களுக்கு பிறகு, ரூ.40 ஆயிரத்தை கடந்த நிலையில், சென்னையில் ஒரு சவரன் தங்கம் இன்று காலை நிலவரப்படி, ரூ.40,128-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை தொடர்ந்து 3  நாளாக உயர்ந்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.40,128க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ. 5,106க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.600 குறைந்து ரூ71.600க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ரூ.71.60 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Also see... டிசம்பர் 1: சமையல் கேஸ் விலை எவ்வளவு? குறைவா அதிகரிப்பா?

கடந்த ஏப்ரல் மாதத்தில் தங்கம்விலை ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. பின்னர், குறைந்து ரூ.37 ஆயிரம் முதல் ரூ.39 ஆயிரம் வரை விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், 8 மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.40 ஆயிரத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Gold, Gold Price