வரலாற்றில் முதன்முறையாக ஒரு சவரன் தங்கம் விலை ரூ.40,000-ஐ கடந்தது

சென்னையில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 872 ரூபாய் அதிகரித்து, வரலாற்றில் முதல் முறையாக 40,000 ரூபாயைக் கடந்து விற்பனையாகிறது.

வரலாற்றில் முதன்முறையாக ஒரு சவரன் தங்கம் விலை ரூ.40,000-ஐ கடந்தது
வரலாற்றில் முதன்முறையாக ஒரு சவரன் தங்கம் விலை ரூ.40,000-ஐ கடந்தது.
  • Share this:
கொரோனா வைரசின் பாதிப்பு, பங்கு சந்தைகள் வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை சரிவு ஆகியவற்றால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் விலை நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.


இந்நிலையில், சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 109 ரூபாய் அதிகரித்து, 5013 ரூபாய்க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.


இதனால், ஒரு சவரனுக்கு ஒரே நாளில் 872 ரூபாய் அதிகரித்து, வரலாற்றில் முதல்முறையாக 40,000 ரூபாயைக் கடந்து, 40104 ரூபாய்க்கு விற்பனையாகிறது.



மேலும், கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை ஒரு கிராமுக்கு 310 ரூபாயும், ஒரு சவரனுக்கு 2480 ரூபாயும் அதிகரித்துள்ளது. இதனிடையே, ஒரு கிராமம் வெள்ளி விலை 4 ரூபாய் அதிகரித்து, ₹70.90-க்கும், ஒரு கிலோவுக்கு 4,000 ரூபாய் அதிகரித்து 70,900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


அத்துடன், கடந்த 10 நாட்களில் மட்டும் ஒரு கிராம் வெள்ளி விலை 9 ரூபாய் 70 காசுகளும், ஒரு கிலோவுக்கு 13,700 ரூபாயும் அதிகரித்துள்ளது.
First published: July 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading