Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /வணிகம் /

Gold Rate | கிராமிற்கு 5000-ஐ தாண்டியது தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன?

Gold Rate | கிராமிற்கு 5000-ஐ தாண்டியது தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன?

மாதிரி படம்

மாதிரி படம்

சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ40,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஜூலை முதல் நாள், மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

அந்த வகையில், தங்கம் விலை தொடர்ந்து 3 வது நாளாக இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.5,010 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ40,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

நேற்று மாலை நிலவரப்படி,கிராமுக்கு 19 ரூபாய் உயர்ந்து ரூ.4,955 ஆகவும், சவரனுக்கு 152 ரூபாய் அதிகரித்து ரூ.39,640ஆக விற்பனையானது. 

Also Read: நிலையான வருமானம் பெற விரும்பும் மூத்த குடிமக்களுக்கான அரசின் முதலீட்டு திட்டங்கள்.!

அதேபோல வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்தது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.70.50 க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.700 உயர்ந்து ரூ.70,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

First published:

Tags: Gold Price, Gold rate