சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ₹4784 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ₹4804 இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ₹20 குறைந்துள்ளது.
அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ₹38,432-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ₹ 160 குறைந்து ₹38,272-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ₹ 4784 விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ₹ 68.30 விற்பனை ஆன நிலையில் இன்று ₹ 0.60 குறைந்து ₹ 67.70 விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனே இருந்தது. மேலும் இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கள் அன்று தங்கம் விலை உயந்தது. அதனை தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ₹ 24 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹ 160 குறைந்தது.
கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனே இருந்த நிலையில் நேற்றும் இன்றும் தங்கம் விலை குறைந்ததால் சவரன் ₹38,272-க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து தங்கத்தில் விலை இரண்டாவது நாளாக குறைந்ததால் பொதுமக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.