Home /News /business /

Gold Rate | தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Gold Rate | தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை

தங்கம் விலை

கடந்த வாரத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தில் விலை இந்த வாரத்தில் தொடர்ந்து குறைந்து வருவதால் பொதுமக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

  • News18
  • Last Updated :
    சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ₹4752 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ₹4,764 இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ₹12 குறைந்துள்ளது.

    அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி  ₹38,112-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று  ₹ 96 குறைந்து ₹38,016-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில்  ₹4752 விற்பனை செய்யப்படுகின்றது.

    ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ₹ 66.90 விற்பனை ஆன நிலையில் இன்று ₹ 0.10 உயர்ந்து  ₹ 67.00 விற்பனை செய்யப்படுகிறது.

    Also read... Chennai Power Cut | சென்னையில் இன்று (12-11-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை..



    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த  வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்தது. மேலும் இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கள் அன்றும் தங்கம் விலை உயந்தது. இந்நிலையில் அதனை தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றது.

    கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் 39,000 கடந்து ஒரு சவரன் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலை குறைந்து தற்போது சவரன் ₹38,016-க்கு விற்பனையாகிறது.

    கடந்த வாரத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தில் விலை இந்த வாரத்தில் தொடர்ந்து குறைந்து வருவதால் பொதுமக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Gold Price, Gold rate

    அடுத்த செய்தி