Gold Rate | கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
Gold Rate | கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
தங்கம் விலை
கடந்த வாரத்தில் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இந்த வாரம் 38,000 கடந்து இன்று சவரன் ₹38,416-க்கு விற்பனையாகிறது. இதனால் வரும் நாட்களில் விலை குறையுமா அல்லது மேலும் கூடுமா என்ற குழப்பத்தில் பொதுமக்கள் தங்கம் வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ₹4802 உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ₹ 4770 இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 32 உயர்ந்துள்ளது.
அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ₹ 38,160-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ₹ 256 உயர்ந்து ₹38,416-க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ₹ 4802 விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ₹ 67.00 விற்பனை ஆன நிலையில் இன்று ₹ 0.70 குறைந்து ₹ 66.30 விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து நாட்களாக விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹ 256 உயந்துள்ளது.
கடந்த வாரத்தில் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இந்த வாரம் 38,000 கடந்து இன்று சவரன் ₹38,416-க்கு விற்பனையாகிறது. இதனால் வரும் நாட்களில் விலை குறையுமா அல்லது மேலும் கூடுமா என்ற குழப்பத்தில் பொதுமக்கள் தங்கம் வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.