முகப்பு /செய்தி /வணிகம் / அவசரமாக நகையை வைத்து பணம் வேண்டுமா? இந்த வங்கிகளில் வட்டி கம்மி !

அவசரமாக நகையை வைத்து பணம் வேண்டுமா? இந்த வங்கிகளில் வட்டி கம்மி !

நகை கடன்

நகை கடன்

பெரும்பாலான நிறுவனங்களில் தங்கநகைக் கடன் வழங்க செயல்முறைக் கட்டணம் எதையும் வசூலிக்க மாட்டார்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அவசரத்திற்கு தங்க நகையை வைத்து பணம் வாங்க வேண்டுமா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி விகிதம் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

பெரும்பாலான நடுத்தர குடும்பங்களில் அவசரம், தேவை என்றால் உடனே வீட்டில் இருக்கும் நகையை வைத்து கடன் பெறும் பழக்கம் நிறைய உள்ளது. மற்றவர்களிடம் சென்று கடன் கேட்டு கை ஏந்துவதை விட நம்மிடம் இருக்கும் நகையை பயன்படுத்திக் கொள்ளலாம். பிறகு மீட்டுக்கலாம் என்பது தான் அவர்களின் முதல் சிந்தனை. அப்படி அவசர தேவைக்கு நகையை வைத்து வங்கியில் கடன் பெற நீங்கள் நினைத்தால் அதற்கு முன்பு இந்த தகவல்களை எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். கண்டிப்பாக உதவும்.

அவசரத் தேவைக்கு தங்க நகைகளை அடமானம் வைக்கும்போது, கடன் கிடைத்தால் போதும் என்று மட்டும் நினைக்காதீர்கள் வட்டி, நகைக்கு பாதுகாப்பு இதை எல்லாம் கருத்தில் கொள்ளுங்கள்.

தங்கத்தின் மதிப்பில் அதிகபட்சமாக 75% மட்டுமே கடனாக வழங்கப்படும். இந்த சதவிகிதம், வங்கிகள், நிதி நிறுவனங்களைப் பொறுத்து மாறும். உங்களுக்கு அவசியம் தேவை எனில், அதிகமாகக் கடன் தரும் வங்கிகளையோ, நிதி நிறுவனங்களையோ நீங்கள் அணுக முடியும். அதிகமான பணத்தை அளிக்கும் போது நிறுவனங்கள் அதிகமான வட்டியையும் உங்களிடம் கேட்கலாம். அதனால் எப்போதுமே வட்டியை பிற கடன் வழங்கும் நிறுவனங்களுடன் ஒப்பிட்டு, குறைவாக இருக்கிறதா என்பதைப் பார்த்து முடிவு செய்யுங்கள்.பெரும்பாலான நிறுவனங்களில் தங்கநகைக் கடன் வழங்க செயல்முறைக் கட்டணம் எதையும் வசூலிக்க மாட்டார்கள். ஆனால், மதிப்பீட்டுக் கட்டணம் உண்டு.

எளிதாகக் கடன் கிடைக்கிறது என்பதற்காகத் தேவைக்கு அதிகமான கடனுக்கு விண்ணப்பிக்காதீர்கள்.தங்க நகைக்கான சமமாக்கப்பட்ட மாதாந்தரத் தவணையைக் கட்ட ஒருபோதும் மறக்காதீர்கள். ஏனெனில், இதனால் உங்கள் தங்கத்தை இழக்கக்கூடும்.இப்போது வட்டி விவரங்களுக்கு வருவோம். எந்த வங்கியில் எவ்வளவு வட்டி விகிதத்தில் நகை கடன் கொடுக்கப்படுகிறது என பார்ப்போம். ஐசிஐசிஐ பேங்கில் 9% முதல் 19.76% வரை, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் - 7%, கனரா பேங்கில் - 7.35%, ஆக்சிஸ் பேங்கில் 13.50% முதல் 16.95% வரை

முத்தூட் ஃபைனான்ஸ் 12% முதல் 26%, பஞ்சாப் நேஷனல் பேங்கில் 7.70% முதல் 8.75% பேங்க் ஆஃப் பரோடாவில் - 9.00% முதல் 9.15%, கொடாக் மகிந்திரா பேங்கில் - 10% முதல் 17% வட்டி விகிதத்தில் நகைக்கடன் வழங்கப்படுகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Gold loan