Home /News /business /

கம்மியான வட்டியில் எந்த வங்கியில் நகைக் கடன் கிடைக்கும்? இங்கே தெரிந்து கொள்ளுங்கள்!

கம்மியான வட்டியில் எந்த வங்கியில் நகைக் கடன் கிடைக்கும்? இங்கே தெரிந்து கொள்ளுங்கள்!

கோல்டு லோன்

கோல்டு லோன்

குறைந்த வட்டியில் கோல்டு லோன் வழங்கும் வங்கிகளின் விவரங்களை பார்க்கலாம்.

    மிடில் கிளாஸ் குடும்பங்களில் அவசரகால பண தேவைகள், ஆபத்து காலங்களில் ஏற்படும் திடீர் பண தேவைகள் வழக்கமான ஒன்று.இப்படி திடீரென்று பண தேவை ஏற்படும் போது பெரும்பாலானோர் முதலில் நண்பர்களிடம் கேட்பார்கள், கிரேடிட் கார்டு இருந்தால் அதை பயன்படுத்திக் கொள்வார்கள். பெரிய தொகை என்றால் லோன் எடுப்பார்கள். அதை விட பெரிய தொகை என்றால் வீட்டில் இருக்கும் நகைகளை பயன்படுத்திக் கொள்வார்கள். அதாவது நகைக்கடன்.

    பொதுத்துறை வங்கி, கூட்டுறவு வங்கி, தனியார் நிதி நிறுவனங்கள், தனியார் வங்கிகளில் இந்த கோல்டு லோன் வழங்கும் முறை செயல்பாட்டில் உள்ளது. குறைந்த வட்டியில் இங்கு கோல்டு லோன் வழங்கப்படுகின்றன. அதே போல் பொதுத்துறை வங்கியில் நகைக்கடனில் பெண்களுக்கு சில சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

    பாதுகாப்பான கடன்களில் (Secured loans)  இந்த கோல்டு லோனும் இடம் பெறுகிறது. காரணம் இதில் குறைந்த அளவிலேயே கிரெடிட் ரிஸ்க் உள்ளது.. பாதுகாப்பற்ற கடன் விருப்பங்களுடன் ஒப்பிடும் போது பொதுவாக பாதுகாக்கப்பட்ட கடன்கள் (Secured loan) குறைந்த வட்டி விகித விருப்பத்துடன் கிடைக்கின்றன. இது கடன் வாங்க நினைப்பவர்களுக்கு சாதகமான விருப்பமாக இருக்கிறது.

    SBI update : இந்த தேதிகளில் வங்கிச் சேவை பாதிக்கப்படலாம்.. ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்கள் நோட் பண்ணிக்கோங்க!

    நகைக் கடனுக்கு விண்ணப்பித்த சில மணிநேரங்களுக்குள் கிடைக்கும். அதனால் அவசர பணத்தேவையை பூர்த்தி செய்ய இந்த லோனை தேர்வு செய்யலாம். பொதுவாக கோல்டு லோன்கள் 3 ஆண்டுகள் வரை திருப்பி கொடுக்கும் காலத்துடன் வந்தாலும், சில கடன் வழங்குநர்கள் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை கால அவகாசத்தை வழங்குகிறார்கள். குறைந்தபட்சம் 18 காரட் தூய்மை தங்கமாக இருப்பின் தங்க மதிப்பில் 75 சதவீதம் வரை லோன் கிடைக்கும். அதே போல கோல்டு லோன் வாங்குபவர்கள் முதலில் வட்டித் தொகையையும், திருப்பிச் செலுத்தும் காலத்திற்கு பிறகு அசல் தொகையையும் செலுத்த அனுமதிக்கிறது.

    BB ultimate : யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற விஜய் டிவி பிரபலம்!

    இப்போது குறைந்த வட்டியில் கோல்டு லோன் வழங்கும் வங்கிகளின் விவரங்களை பார்க்கலாம்.

    எஸ்பிஐயில் 7.30 சதவீதம் வட்டி, HDFC வங்கியில் 11 சதவீதம் வட்டி, கனரா வங்கியில் 7.35 சதவீதம் வட்டி, இந்தியன் வங்கியில் 7 சதவீதம் வட்டி, ஐடிபிஐ வங்கிடில் 7 சதவீதம் வட்டி, பாங்க் ஆஃப் பரோடாவில் 9.00 சதவீதம் வட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 8.75 சதவீதம் வட்டி, பெடரல் வங்கியில் 8.50 சதவீதம் வட்டியில் தற்போது கோல்டு லோன் வழங்கப்படுகிறது. இந்த வட்டி விவரங்கள் பைசா பஜார் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bank accounts, Bank Loan, Gold loan

    அடுத்த செய்தி