இந்தியாவில் பெரும்பான்மையாக வாழும் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு எப்போதும் தீர்க்க இயலாத பிரச்சினையாக இருப்பது பணப் பிரச்சனை தான். சிறுக, சிறுக சேர்த்து கொஞ்சம் நகை வைத்திருப்பார்கள். அதேசமயம், வேறொரு சமயத்தில் கஷ்டம் என்று வருகிறபோது வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் கடன் பெற அதே நகைகள் தான் உதவியாக இருக்கின்றன.
நமது ஊதியச் சான்று வைத்து பெர்சனல் லோன், கிரெடிட் கார்டு லோன் போன்றவற்றை பெற்றுக் கொள்ள முடியும் என்றாலும், அவற்றில் வட்டி கூடுதலாக இருக்கிறது. ஆனால், தங்க நகைக் கடனில் வட்டி குறைவு என்பதால் மக்கள் இதையே தேர்வு செய்கின்றனர்.
மேலும், நம்மிடம் இருக்கும் நகைகளுக்கு ஏற்ப கடன் பெற்றுக் கொள்ள முடியும். விண்ணப்ப பரிசீலனை, அது, இது என்ற மற்ற நடைமுறைகளால் தாமதம் இன்றி விரைவாக கிடைக்க கூடியது தங்க நகைக் கடன் தான். இப்படி பல வகைகளிலும் சாதகமான நிலையை கொண்ட நகைக் கடனை எப்போதெல்லாம் பயன்படுத்தி கொள்ளலாம் என்பது குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
வணிக விரிவாக்கம்
நீங்கள் சிறிய அளவில் தொழில் செய்து வந்தாலும் சரி அல்லது பெரிய வர்த்தக நிறுவனங்களை நடத்தி வந்தாலும் சரி, உங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்ய நிதி தேவைப்படுகிறது என்றால் நகைக்கடன் பெறலாம். தொழில் கடன் பெற முயற்சிக்கும்போது, பல நிபந்தனைகளால் அது தாமதம் அடையக் கூடும். ஆனால், கடன் பெறுவதற்கான உத்தரவாதம் நகைகள் மூலமாக கிடைக்கும்.
டென்ஷனை விடுங்க.. தவறான அக்கவுண்டுக்கு பணத்தை அனுப்பினால் திரும்ப பெறுவது ஈஸி!
கல்வித் தேவைகள்
நம் பிள்ளைகளின் கல்வித் தேவைகளுக்காக கல்விக் கடன் கிடைத்து விட்டால் அது மகிழ்ச்சியான விஷயம் தான். ஆனால், எல்லோருக்கும் இந்த வாய்ப்பு அமைந்து விடுவதில்லை. கடந்த கால நடவடிக்கைகள், குறைவான மதிப்பெண் போன்ற காரணங்களை காட்டி கல்விக்கடன் மறுக்கப்படலாம். அதுபோன்ற சமயத்தில் தயங்காமல் நகைக்கடன் பெறலாம்.
மருத்துவ தேவைகளுக்கு
எப்போது யாருக்கு என்ன நேரும், வாழ்க்கை பாதுகாப்பிற்கு என்ன உத்தரவாதம் என்பது இல்லாமல் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக, விபத்துகள், உயிர் காக்கும் ராஜ உறுப்புகளின் பாதிப்புகள் ஏற்படுகின்ற சமயத்தில் பெரும் மருத்துவ செலவு ஏற்படுவதை தவிர்க்க இயலாது. அத்தகைய தருணங்களில் நகைக்கடன் பெறலாம்.
திருமணம்
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று பெரியோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அவ்வளவு சிறப்புமிக்க கல்யாண செலவுகளுக்கு பணம் இன்றி தவிக்கையில், நகைக்கடனை காட்டிலும் சிறப்பான வாய்ப்பு வேறெதுவும் இருக்க முடியாது. தவிர, திருமணத்தில் கிடைக்கும் மொய் மூலமாக கடனை உடனடியாக அடைக்க முடியும்.
சுற்றுலா தேவைகளுக்கு
மேற்குறிப்பிட்ட 4 காரணங்களும் அத்தியாவசிய தேவைகளாக நமக்கு தெரிந்தாலும், சுற்றுலா காரணத்திற்காக நகைக்கடன் பெறுவது அநாவசியமாக உங்களுக்கு தோன்றலாம். ஆனால், நகைக்கடனை குறுகிய காலத்திற்குள் அடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது என்றால், கடன் பெற்று சுற்றுலா செல்வதில் எந்தத் தவறும் இல்லை.
ஏனென்றால் கல்வி மீது கவனம் செலுத்தும் குழந்தைகளுக்கு ஏற்படும் மன இருக்கம், அலுவலகப் பணி மற்றும் குடும்ப பொறுப்புகளை சுமக்கும் பெண்களுக்கு ஏற்படும் உடல் சோர்வு, வணிக ரீதியில் உங்களுக்கு ஏற்படக் கூடிய மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு தருவதாக அமையக் கூடிய சுற்றுலாவுக்கு செலவு செய்வதில் தவறேதும் இல்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.