Home /News /business /

தங்கத்தில் முதலீடு செய்யனும்னு ஐடியா இருக்கா? அப்ப முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க

தங்கத்தில் முதலீடு செய்யனும்னு ஐடியா இருக்கா? அப்ப முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க

தங்க முதலீடு

தங்க முதலீடு

பிஎஸ்இ சென்செக்ஸ் நிறுவப்பட்ட 1979 ஆம் ஆண்டிலிருந்து தங்கமானது 45 மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India
  பெரும்பாலான பணக்காரர்களுக்கு, மஞ்சள் உலோகம் என்கிற தங்கத்தின் மீது முதலீடு செய்வது ஒரு நம்பிக்கைக்குரிய முதலீடாகத் தெரிவதில்லை. ஏற்கனவே உள்ள பணவீக்க அழுத்தங்களைக் குறைக்க அமெரிக்க மத்திய வங்கியானது செப்டம்பர் மாதத்தில் வட்டி விகிதங்களை சுமார் 50bps அளவுக்கு உயர்த்த திட்டமிட்டுள்ளதால், தங்கத்தின் விலை ஏற்கனவே அவற்றின் மாதாந்திர சரிவை தொட்டுள்ளதால், அவற்றின் மதிப்பை அதிகரித்து வருகின்றன.

  தங்கத்தின் விலை 0.2% சரிந்து 10 கிராமுக்கு ரூ.51,322  வரை  உள்ளது. மேலும் அவை சரிவதற்கு வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இதனால் தங்கத்தில் முதலீடு செய்ய கூடாது என்று அர்த்தமில்லை. இது குறித்து பல விஷயங்களை நாம் விரிவாக அறிந்துகொள்ள நிபுணர்களின் கருத்துக்கள் தேவைப்படுகிறது.

  தங்கத்தில் கணிசமான அளவு முதலீடு செய்வது கடினமான விஷயமாகும். ஆனால், அது பல இந்தியப் பெண்களின் முதலீட்டுத் தேர்வாக இருப்பதை நாம் தடுக்க முடியாது. டெல்லியைச் சேர்ந்த  ராதிகா கூறுகையில், “தங்கம் வலுவான மற்றும் தனித்துவமான சமூக மதிப்பைக் கொண்டுள்ளது, இதை வேறு எந்த முதலீட்டு விருப்பத்திலும் ஒப்பிட முடியாது. இந்தியாவில் உள்ள பல பெண்களுக்கு தங்கம் பாதுகாப்பு உணர்வைத் தருகிறது மற்றும் அந்த பாதுகாப்பு உணர்வு மிகவும் விலைமதிப்பற்றது மற்றும் தரமானது. எல்லாவற்றையும் நாம் அளவிட முடியாது” என்று கூறியுள்ளார்.

  போஸ்ட் ஆபீஸில் சேமிக்கும் பணத்திற்கு வரி விலக்கு கிடைக்குமா? கேள்விக்கான விடை இதோ!

  பிஎஸ்இ சென்செக்ஸ் நிறுவப்பட்ட 1979 ஆம் ஆண்டிலிருந்து தங்கமானது 45 மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது. இடைப்பட்ட நேரத்தில், இந்த பெஞ்ச்மார்க் இன்டெக்ஸ் 390 மடங்கு வருமானத்தை அளித்துள்ளது. இருப்பினும், தங்கம் என்பது பாரம்பரியமாக பணவீக்கத்திற்கு எதிரான ஒரு நல்ல வழிமுறையாக உள்ளது. இதில் பொதுவான கருத்து என்னவென்றால், பணவீக்கம் அதிகரித்து வரும் பொருளாதாரம் என்பது நிச்சயமற்ற காலங்களில் தங்கத்தின் விலை ஏற்றத்தை குறிக்கும். ஏனென்றால், அன்றாட செலவு அதிகமாகும்போது, ​​முதலீட்டாளர்கள் குறைந்த ஆபத்துள்ள, நிலையான வருமானத்தை உருவாக்கும் முதலீட்டு கருவிகளுக்கு மாறுகிறார்கள். அதில் தங்கமும் ஒன்று. இயற்கையாகவே, அவை பணவீக்கம் இல்லாத வருமானத்தை வழங்குவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

  பரிமாற்ற-வர்த்தக நிதிகள் 

  தங்கத்தின் விலையைப் பிரதிபலிக்கும் வகையில், இந்த பரிமாற்ற-வர்த்தக நிதிகள் தங்கத்தில் முதலீடு செய்கின்றன. ஒரு ETF அலகு 1 கிராம் தங்கத்தின் அளவாகும். நீங்கள் தங்கம் அல்லது பரிமாற்ற-வர்த்தக நிதிகள் நிதிகளில் மட்டுமே முதலீடு செய்திருந்தால், உங்கள் வருமானம் குறைந்த லாபம் கொண்டதாக இருக்கலாம். எச்.டி.எப்.சி தங்க பரிமாற்றம்-வர்த்தக நிதி-இன் தரவுகளின்படி, 10 வருட சராசரி வருமானம் 4% மட்டுமே என்று கூறப்படுகிறது. தற்போது பணவீக்கம் 6.71% ஆக இருப்பதால், உங்கள் நிகர வருமானம் எதிர்மறையாக இருக்கும்.

  காலாவதியான பாலிசிகளை மீட்க எல்.ஐ.சி தரும் அருமையான வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க!

  எனவே தற்போதைய உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப, தங்க பரிமாற்ற-வர்த்தக நிதிகள் விற்பனையை கண்டு வருகின்றன. மேலும், ஜூலை 2022-ல்  ரூ.0.96 கோடியை மட்டுமே குவித்தன. அதற்கேற்ப, அவை ரூ.456.75 கோடி மதிப்பை கொண்ட வெளிப்பாட்டை பெற்றன. இந்த  நிதிகளுக்கான நிர்வாகத்தின் கீழ் உள்ள சராசரி சொத்து (AUM) என்பது ரூ.20,142 கோடியிலிருந்து ரூ.19,987.66 கோடியாக குறைந்துள்ளது.

  செபியில் (SEBI) பதிவு செய்யப்பட்ட முதலீட்டு ஆலோசகர் ரோஹித் ஷா இது குறித்து பல ஆலோசனைகளை கூறினார். “கடந்த இரண்டு-மூன்று வருடங்களில் நல்ல வருமானத்தைப் பார்த்து ஒருவர் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பினால், அவர் ஏமாற்றமடையக்கூடும். உகந்த வருமானத்துடன் பல-சொத்து மதிப்புகளை உருவாக்க விரும்பினால், தங்கம் உங்களுக்கானது. ஆனால் வருமானத்தை அதிகப்படுத்துவதே உங்கள் முன்னுரிமை என்றால், நீண்ட காலத்திற்கு நீங்கள் தங்கத்தை விரும்பாமல் இருக்கலாம்," என்று அவர் விளக்கினார். எனவே தங்கத்தில் முதலீடு செய்வது என்பது நேரத்தின் காலநிலையை பொருத்தது என்பது இதன் மூலம் புரிகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sreeja
  First published:

  Tags: Gold, Investment, Savings

  அடுத்த செய்தி