இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தின் அளவு மோசமான நிலையை அடைந்து வரும் நிலையில், தங்கத்திற்கான பயன்பாடு குறையவில்லை.
‘கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத பெருளாதார நெருக்கடி’, மற்றும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்ட நெருக்கடி போன்றவற்றால் கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து, இந்தியாவில் பல கோடி பேர் தங்களது வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். வருமானத்தை இழந்து ஏராளமானோர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் தள்ளப் பட்டுள்ளனர். இந்த மோசமான நிலையில், இந்தியாவில் தங்கம் இறக்குமதி அளவானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11 மடங்கு அதிகரித்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரையில், நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகம் பாதிக்கும் இரண்டு முக்கியக் காரணிகளில் ஒன்று கச்சா எண்ணெய், மற்றொன்று தங்கம். இவை இரண்டும், ஏறத்தாழ 90 சதவீதம் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன.
நாட்டின் ரூபாய் மதிப்பு சரிவுக்கும், நிலையற்ற தன்மைக்கும் இவை மிகப்பெரிய காரணமாக இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதேபோல இந்திய அரசு அதிக அளவிலான டாலர் இருப்பைச் செலவு செய்ய வேண்டிய முக்கிய வர்த்தகப் பொருளாகவும் இவை இருந்து வருகின்றன.
இந்நிலையில், 2021 ஏப்ரல் - ஜூன் காலாண்டில் மட்டும் சுமார் 7.9 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கம் வெளிநாடுகளில் இந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 3 மாதங்களில் மட்டும் 58,572.99 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
கடந்த 2020 ஆம் ஆண்டின் இதே ஏப்ரல் - ஜூன் காலாண்டில், இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பானது 688 மில்லியன் டாலர், அதாவது 5,208.41 கோடி ரூபாய் ஆகும். அதன்படி கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இந்த இறக்குமதியானது ஏறத்தாழ 11 மடங்கு அதிகமாகும். இதனால், 2021 ஏப்ரல் - ஜூன் காலாண்டில் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை அதாவது ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கும் மத்தியிலான வித்தியாசம் 31 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
Must Read : ஆகஸ்ட் 1 முதல் மாத சம்பளம், ஓய்வூதியம், இஎம்ஐ கட்டணத்திற்கு புதிய விதி - மாற்றம் செய்த ஆர்பிஐ
இந்தியர்களிடையே தங்கத்தில் முதலீடு செய்யும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சென்னையில் இன்று (ஜூலை 26) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 4,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை 4,510 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 36,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 80 ரூபாய் உயர்ந்து 36,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.