Home /News /business /

தங்கம் இறக்குமதி வரி 5 சதவீதம் உயர்வு.. தங்கம் விலை அதிகரிக்குமா?

தங்கம் இறக்குமதி வரி 5 சதவீதம் உயர்வு.. தங்கம் விலை அதிகரிக்குமா?

காட்சி படம்

காட்சி படம்

தங்கத்தை கொள்முதல் செய்வதில் உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

    இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீது 7.5 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், அதை 12 சதவீதமாக உயர்த்துவதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு ஜூன் 30ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது.

    நாட்டின் வர்த்தக பற்றாக்குறை இதுவரையிலும் இல்லாத அளவுக்கு மிக அதிகமாக உயர்ந்து, கடந்த ஜூன் மாதத்தில் புதிய உச்சத்தை தொட்டது. இதன் எதிரொலியாக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்தது. இத்தகைய சூழலில் தங்கம் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பொருள் அல்லது கரன்ஸி தொடர்பான மூத்த ஆராய்ச்சியாளர் பவிக் படேல், நியூஸ் 18 ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “இரண்டு விஷயங்களை ஈடு செய்வதற்காக தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. முதலாவதாக, பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி குறைப்பை ஈடு செய்யும் வகையிலும், அடுத்ததாக நடப்பு கணக்கு பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.



    அரசு ஏன் இறக்குமதி வரியை உயர்த்துகிறது?

    இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை என்பது 6.53 பில்லியன் டாலர் என்ற நிலையில் இருந்து ஒரே ஆண்டில் 24.29 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இந்த பற்றாக்குறை அதிகரிப்பதன் எதிரொலியாக டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை புதிய உச்சமாக ரூ.79.12 ஆக வந்தது.

    தங்கம் கொள்முதலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியா

    தங்கத்தை கொள்முதல் செய்வதில் உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. நாட்டின் பெரும்பாலான தங்க தேவைகள் என்பது இறக்குமதி மூலமாகத்தான் நிவர்த்தி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு மே மாதத்தை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மே மாதத்தில் தங்க இறக்குமதி என்பது 9 மடங்கு அதிகரித்து 7.7 பில்லியன் டாலராக இருக்கிறது.

    வர்த்தக பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையிலும், ரூபாய் மதிப்பு சரியும் நிலையிலும் தங்க இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் அதன் இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.



    also read : திருமண காப்பீடு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் இதோ!

    தற்போதைய வரி உயர்வு மூலமாக தங்கத்தின் மீது விதிக்கப்படும் மொத்த வரி என்பது 18.75 சதவீதமாக இருக்கும். மொத்த இறக்குமதி வரி என்பது 15.75 சதவீதமாக இருக்கும். இதில் 12.50 சதவீதம் என்பது அடிப்படை இறக்குமதி வரி ஆகும். 2.5 சதவீத விவசாய செஸ் வரியும், 0.75 சதவீதம் என்பது சமூக நலனுக்கான வரியாகவும் இருக்கிறது. இது தவிர தங்கம் விற்பனைக்கு வருகின்ற போது 3 சதவீதம் அளவுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.

    ஆக உல்நாட்டு தேவை மற்றும் இறக்குமதி வரி உள்ளிட்டவற்றை கணக்கீடு செய்யும்போது 10 கிராம் தங்கத்தின் விலையில் ரூ.2,000 வரை அதிகரிக்க கூடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    முதலீட்டாளர்களின் நிலை என்ன?

    முதலீட்டாளர்களைப் பொருத்தவரையில் உள்நாட்டு மார்க்கெட்டில் தங்கம் என்பது விலையுயர்ந்த பொருளாக மாறும். தற்போதைய மல்டி கமோடிட்டி எக்ஸ்சேஞ்ச் தங்க விலைக்கு ஏற்ப, மார்க்கெட்டில் தங்க விலை உயர்த்தப்பட்டுள்ளது.

     
    Published by:Tamilmalar Natarajan
    First published:

    Tags: Gold, Gold rate

    அடுத்த செய்தி