ஹோம் /நியூஸ் /வணிகம் /

Gold Rate | மீண்டும் குறைந்தது தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன?

Gold Rate | மீண்டும் குறைந்தது தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன?

தங்கம்

தங்கம்

Gold Rate | சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து இன்று ரூ.39,560க்கு விற்பனை ஆகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஜூலை முதல் நாள், மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

    அந்த வகையில், தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. 2 நாட்களில் சவரனுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளது.  தங்கம் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாயும், சவரனுக்கு 40 ரூபாயும் குறைந்துள்ளது.

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி, கிராம் ரூ.4,950 ஆகவும் சவரன் ரூ.39,600 ஆகவும் இருந்தது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ரூ.4,945 ஆகவும் சவரனுக்கு 40 ரூபாய் சரிந்து ரூ.39,560 ஆகவும் குறைந்துள்ளது.

    Also see... நாணய கண்காணிப்புப் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கிய அமெரிக்கா!

    அதேபோல வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ரூ.68.50 ஆக இருந்த நிலையில் 20 பைசா சரிந்து, ரூ.67.00ஆகவும் கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.67,000 ஆகவும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Gold Price