ஹோம் /நியூஸ் /வணிகம் /

Gold Rate | மீண்டும் குறைந்தது தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன?

Gold Rate | மீண்டும் குறைந்தது தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன?

தங்கம்

தங்கம்

Gold Rate | சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து இன்று ரூ.37,648க்கு விற்பனை ஆகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஜூலை முதல் நாள், மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

    அந்த வகையில், நேற்றைய நாள் முடிவில் ஒரு சவரன் ரூ.37,720 ஆகவும் 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.4,715 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்றும் தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை சரிந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது.

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 72 குறைந்து ரூ.37,648 ஆக விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ. 9 குறைந்து ரூ.4,706 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.40,864 ஆகவும் ஒரு கிராம் ரூ.5,108 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

    Also see...ரயில் நிலையங்களில் இந்த கட்டணம் மீண்டும் குறைப்பு!

    சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.64 ஆக விற்பனையாகிறது. இதன் காரணமாக பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.64,000ஆக விற்பனையாகிறது.

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Gold, Gold Price