ஹோம் /நியூஸ் /வணிகம் /

Gold Rate | தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு.. இன்றைய விலை என்ன?

Gold Rate | தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு.. இன்றைய விலை என்ன?

மாதிரி படம்

மாதிரி படம்

| இன்று (டிசம்பர் 30) தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது .

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஜூலை முதல் நாள், மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 21ஆம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ. 41 ஆயிரத்தை நெருங்கும் வகையில் சென்றது.

அதன் பின்னர் மறு நாளே விலை அதிரடியாக குறைந்தது. அதனையடுத்து மீண்டும் உயர தொடங்கியது. இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.40,920க்கு விற்பனையாகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5,115க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் உயர்ந்து ரூ.74.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

First published:

Tags: Gold Price