ஹோம் /நியூஸ் /வணிகம் /

Gold Rate | மீண்டும் குறைந்தது தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன?

Gold Rate | மீண்டும் குறைந்தது தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன?

மாதிரி படம்

மாதிரி படம்

gold Rate | சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 464 ரூபாய் குறைந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை தொடர்ந்து 3  நாளாக உயர்ந்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 464 ரூபாய் குறைந்துள்ளது.

அதன்படி கிராமிற்கு 58 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 5,066 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 464 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் 40,528 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதேபோல் வெள்ளி விலை கிராமிற்கு ஒரு ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி 73 ரூபாய் 70 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி 73, 700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Also see... புதிய கார் வாங்க திட்டமா..? இந்த விஷயத்தை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!

கடந்த ஏப்ரல் மாதத்தில் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.40,000 தாண்டி விற்பனையானது. பின்னர், குறைந்து ரூ.37,000 முதல் ரூ.39,000 வரை விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், 8 மாதங்களுக்கு பிறகு இந்த டிசம்பர் மாதத்தில் தங்கம் விலை தொடர்ந்து ரூ.40,000லேயே இருந்து வருகிறது.

First published:

Tags: Gold rate