ஹோம் /நியூஸ் /வணிகம் /

Gold Rate | உயர்ந்தது தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன?

Gold Rate | உயர்ந்தது தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன?

தங்கம்

தங்கம்

Gold Rate | சென்னையில் இன்று 22காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5,047 ஆகவும், சவரனுக்கு ரூ.40,376க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஜூலை முதல் நாள், மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

அந்த வகையில், தங்கம் விலை தொடர்ந்து 3 வது நாளாக இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5,047 ஆகவும், சவரனுக்கு ரூ.40,376க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.24 உயர்ந்து, சவரனுக்கு ரூ.192 உயர்ந்தது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,506 என சவரனுக்கு ரூ. 44,048 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.27 உயர்ந்து, சவரனுக்கு ரூ.216 உயர்ந்தது.

Also see... ஆன்லைனில் ஆதாரின் எந்தெந்த விபரங்களை மாற்ற முடியும்? என்னென்ன தேவைப்படும் ? 

அதேபோலவே வெள்ளியின் விலையும்  இன்று உயர்ந்துள்ளது.  சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.72.50க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.72,500க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.1,200 அதிகரித்துள்ளது.

First published:

Tags: Gold, Gold rate