ஹோம் /நியூஸ் /வணிகம் /

Gold Rate | மீண்டும் குறைய தொடங்கியது தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன?

Gold Rate | மீண்டும் குறைய தொடங்கியது தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன?

தங்கம் விலை

தங்கம் விலை

Gold Rate | சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.5,010க்கு விற்பனையாகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஜூலை முதல் நாள், மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

அந்த வகையில், நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.29 உயர்ந்து ரூ.5,045க்கும் சவரனுக்கு ரூ.232 உயர்ந்து ரூ.40,360க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.40,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.5,010க்கு விற்பனையாகிறது.

Also see... வருமான ஆதாரம் தொடர்பான ஆவணங்கள் இல்லாமல்கூட நீங்க வங்கி லோன் பெறலாம்! - எப்படி தெரியுமா?

அதேபோல சென்னையில் வெள்ளி ஒரு கிலோ ரூ.1,700 குறைந்து ரூ.70,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ரூ.70.80 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று விலை சற்று குறைந்திருந்தாலும் தங்கம் விலை 8 மாதங்களுக்கு பிறகு அண்மையில் மீண்டும் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Gold Price, Gold rate