ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 640 ரூபாய் சரிந்தது...

ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 640 ரூபாய் சரிந்தது...

தங்கம் விலை

ஒரு கிராம் தங்கம் 80 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 805 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

 • Share this:
  சென்னையில் நேற்று (06.01.2021) ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ. 28 உயர்ந்து  ரூ. 4,885க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ. 224 உயர்ந்து  ரூ.39,080க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 640 ரூபாய் சரிந்ததுள்ளது. ஒரு சவரன் தங்கம் 38,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 80 ரூபாய் குறைந்து 4,805 ரூபாயாக உள்ளது.

  அதேபோல வெள்ளி விலை கிராமுக்கு 90 காசுகள் குறைந்து 74 ரூபாய் 20 பைசாவாக உள்ளது. கட்டி வெள்ளி கிலோவுக்கு 900 ரூபாய் குறைந்து 74, 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில்,  இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து விலை அதிகரித்தலால் தங்கம் விலை 39,000 கடந்திருந்தது.

  மேலும் படிக்க...36 ஆண்டுகளாக திமுகவும், அதிமுகவும் மாறி மாறி வெற்றி பெற்று வரும் கன்னியாகுமரி தொகுதி...(வீடியோ)

  இந்நிலையில் இன்றுதான் சற்று குறைந்து விற்பனையாகிறது. இதனால் வரும் நாட்களில் விலை குறையுமா அல்லது மேலும் கூடுமா என்ற குழப்பத்தில் பொதுமக்கள் தங்கம் வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.


  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: