தொடர்ந்து உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை சரிவு.. காரணம் என்ன?
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கொரோனா மருந்து தொடர்பான தகவல்களால், விலை குறைய தொடங்கியுள்ளது.

தங்கம் விலை
- News18 Tamil
- Last Updated: August 13, 2020, 8:10 AM IST
தினமும் புதிய உச்சங்களை பதிவு செய்துவந்த தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக சரிய தொடங்கியுள்ளது.
புதன்கிழமை மாலை நிலவரப்படி சென்னையின் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 138 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 104 ரூபாயாகவும், சவரன் ஆயிரத்து 104 ரூபாய் குறைந்து 40ஆயிரத்து 832 ரூபாயாகவும் உள்ளது. அதே போல், வெள்ளியின் விலை ஒரு கிராம் 7 ரூபாய் 50 காசுகள் குறைந்து 75 ரூபாய் 30காசுகளாக உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் 43ஆயிரத்து 360-ஆக இருந்த நிலையில், புதன்கிழமை காலை நிலவரப்படி 3ஆயிரத்து 256 ரூபாய் குறைந்து 40ஆயிரத்து 104 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், மாலையில் ஒரு சவரன் 728 ரூபாய் அதிகரித்து 40ஆயிரத்து 832-ல் வர்த்தகம் நிறைவடைந்தது. இதனால் தங்கம் விலை குறையும் வேகத்தில் சற்று சறுக்கல் ஏற்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 416 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 5 ஆயிரத்து 13 ரூபாயாக குறைந்ததால், கடந்த 4 தினங்களில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 312 ரூபாயும் சவரனுக்கு 2 ஆயிரத்து 496 ரூபாயும் குறைந்துள்ளது.
கடந்த வெள்ளியன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 83 ரூபாய் 60 காசுகளாக இருந்த நிலையில் தற்போது 70 ரூபாய் 30 காசுகளாக உள்ளதால், கடந்த 4 தினங்களில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 8 ரூபாய் 30 காசுகளும், கட்டி வெள்ளி 8ஆயிரத்து 300 ரூபாயும் குறைந்துள்ளது.
கொரொனாவிற்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ள நிலையில், சர்வதேச அளவில் தங்கம் மற்றும் வெள்ளியின் மீது முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள், அவற்றை விற்று லாபத்தை பதிவு செய்ய தொடங்கியுள்ளனர், இதன் காரணமாகவே தங்கத்தின் விலை பன்மடங்கு குறைந்துள்ளது.குறிப்பாக, தங்கத்தின் மீதான முதலீட்டில், ETF எனப்படும் வகையில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் விற்பனை செய்துள்ளனர். டாலரின் மதிப்பு அதிகரித்ததும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைய முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
அதேபோல், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை எந்த வரம்புமின்றி அதிகரித்து, மிக அதிக விலை என்ற நிலையை அடைந்தது. தற்போது கொரோனா மருந்து மற்றும் டாலர் மதிப்பு ஆகியவற்றை காரணமாக கொண்டு, தங்கத்தின் விலை மாற்றம் கண்டிருக்கிறது.
புதன்கிழமை மாலை நிலவரப்படி சென்னையின் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 138 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 104 ரூபாயாகவும், சவரன் ஆயிரத்து 104 ரூபாய் குறைந்து 40ஆயிரத்து 832 ரூபாயாகவும் உள்ளது. அதே போல், வெள்ளியின் விலை ஒரு கிராம் 7 ரூபாய் 50 காசுகள் குறைந்து 75 ரூபாய் 30காசுகளாக உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் 43ஆயிரத்து 360-ஆக இருந்த நிலையில், புதன்கிழமை காலை நிலவரப்படி 3ஆயிரத்து 256 ரூபாய் குறைந்து 40ஆயிரத்து 104 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், மாலையில் ஒரு சவரன் 728 ரூபாய் அதிகரித்து 40ஆயிரத்து 832-ல் வர்த்தகம் நிறைவடைந்தது. இதனால் தங்கம் விலை குறையும் வேகத்தில் சற்று சறுக்கல் ஏற்பட்டது.