Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /வணிகம் /

சர்ரென உயரும் தங்கம் விலை.. புது ஆண்டில் அதிர்ச்சி கொடுத்த தங்கம் வெள்ளி நிலவரம்!

சர்ரென உயரும் தங்கம் விலை.. புது ஆண்டில் அதிர்ச்சி கொடுத்த தங்கம் வெள்ளி நிலவரம்!

தங்கம்

தங்கம்

இந்த வருடம் முடிவதற்குள் தங்கம் விலை கிராமிற்கு 6000 ரூபாயைத் தாண்டும் என கூறுகிறார்கள் வல்லுனர்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமிற்கு ரூ 20 அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஜூலை முதல் நாள், மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

கடந்த சனிக்கிழமை சவரனுக்கு ரூ 120 உயர்ந்து 41,040 ரூபாயாக இருந்த தங்கத்தின் விலை, இன்று 160 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி ஒருகிராம் தங்கத்தின் விலை ரூ.5552ஆக இன்று விற்பனையாகிறது. அதன்படி ஒரு சவரன் 41,200 ரூபாயாக விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிராம் வெள்ளி 20 பைசா அதிகரித்து 74.50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையே தொடர்ந்தால் இந்த வருடம் முடிவதற்குள் தங்கம் விலை கிராமிற்கு 6000 ரூபாயைத் தாண்டும் என கூறுகிறார்கள் வல்லுனர்கள். இந்த விலையேற்றத்தால் பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

First published:

Tags: Gold, Gold Price, Gold rate, Silver