Home /News /business /

ஏப்ரல் 26 முதல் கூடுதல் விமான சேவைகள் - கோ ஏர் அறிவிப்பு!

ஏப்ரல் 26 முதல் கூடுதல் விமான சேவைகள் - கோ ஏர் அறிவிப்பு!

கோஏர்

கோஏர்

ஜெட் ஏர்வேஸ் விமான ரத்தால் பாதிப்படைந்திருந்த விமான பயணிகள் கோ ஏரின் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
    பட்ஜெட் விமான போக்குவரத்து நிறுவனம் என அழைக்கப்படும் கோ ஏர் (Go Air) ஏப்ரல் 26 முதல் கூடுதலாக 28 விமான சேவைகளை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.

    ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிதி சிக்கலால் முடங்கியதால் விமானப் பயணிகள் மிகப் பெரிய அளவில் பாதிப்படைந்தனர்.

    ஜெட் ஏர்வேஸ் விமான சேவை பாதிப்பைச் சமாளிக்க ஏர் இந்தியா நிறுவனமும் கூடுதல் வழித்தடங்களில் சேவையை அளிக்க முன்வந்துள்ளது. இதற்காக ஜெட் ஏர்வேஸ் விமானங்களைக் குத்தகைக்கு வேண்டும் என்று ஏர் இந்தியா கேட்டதும் குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், கோ ஏர் நிறுவனம் மும்பை, டெல்லி, நாக்பூர், அகமதாபாத், கோவா, சண்டிகர், ராஞ்சி, ஜெய்ப்பூர், லக்னோ, பாட்னா, புனே மற்றும் கொச்சி உள்ளிட்ட வழித்தடங்களில் தங்களது கூடுதல் விமான சேவையை 2019 ஏப்ரல் 26 முதல் அளிக்க உள்ளதாக அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    ஜெட் ஏர்வேஸ் விமான ரத்தால் பாதிப்படைந்திருந்த விமான பயணிகள் கோ ஏரின் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும் பார்க்க:
    Published by:Tamilarasu J
    First published:

    Tags: Jet Airways

    அடுத்த செய்தி