Home /News /business /

வீட்டில் 2 பெண் குழந்தைகள் இருந்தால் அரசு தரும் இந்த உதவியை நீங்கள் பெறலாம் தெரியுமா?

வீட்டில் 2 பெண் குழந்தைகள் இருந்தால் அரசு தரும் இந்த உதவியை நீங்கள் பெறலாம் தெரியுமா?

பென் குழந்தைகளுக்கான திட்டம்

பென் குழந்தைகளுக்கான திட்டம்

பெண் குழந்தைகளுக்கான அரசு திட்டம் பற்றி தெரியாதவர்கள் இந்த பதிவு மூலம் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது பெற்றோரின் கடமை மட்டுமில்லை இந்த சமுதயாத்தின் பொறுப்பும் கூட. அந்த வகையில் குடும்பக் கட்டுப்பாட்டு முறையை ஊக்குவிப்பது, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி, திருமண உதவித் தொகை போன்றவற்றை மையமாகக் கொண்டு தமிழக முதல்வர் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபற்றி தெரியாதவர்கள் இந்த பதிவு மூல்ம் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால், ரூ.50 ஆயிரமும், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ரூ.25 ஆயிரமும், 18 வயது முதிர்வடைந்த பிறகு முதிர்வுத்தொகை மற்றும் வட்டியுடன் சேர்த்துப் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. டெபாசிட் காலத்திலிருந்து 5 வயது வரை மாதம் ஒன்றுக்கு ரூ.150 என்ற அளவில் கிடைக்கும். 18 வயது வரை இந்த உதவி வந்துகொண்டிருக்கும். பெண் குழந்தையின் கல்விக்கு உதவும் நோக்கில் இந்த உதவி வழங்கப்படுகிறது.

    குடும்ப வருமானம் ஆண்டுக்கு 72,000 ரூபாய்க்குக் குறைவாக இருக்க வேண்டும் என்பது இத்திட்டத்தின் முக்கிய நிபந்தனையாகும்.
    ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் உள்ள சமூக நலப் பிரிவு அலுவலர், மகளிர் நல அலுவலர்களிடம் அசல் வைப்புநிதிப் பத்திரம், பயனாளியின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் பட்டியல், பயனாளியின் பெயரில் தனி வங்கிக் கணக்குப் புத்தக நகல் ஆகிய சான்றுகளுடன் சமர்ப்பித்துப் பயன்பெறலாம்.

    நன்மைகளை அள்ளி தரும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் சந்தேகங்களும் பதில்களும்!

    குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தைகள் இருக்கக் கூடாது. இத்திட்டத்தில் விண்ணப்பித்த பிறகு ஆண் குழந்தைகளைத் தத்து எடுக்கவும் கூடாது.பெண் குழந்தைக்கு மூன்று வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும். .40 வயதுக்குள் குழந்தைகளின் தாயார் குடும்பநல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். ரூ.72 ஆயிரத்துக்குள் வருமானம் இருப்பதற்கான சான்று, ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். 2 ஆவது பெண் குழந்தை பிறந்து 3 வருடத்திற்குள் இருந்தால் தாரளமாக நீங்கள் இந்த திட்டத்தின் பயனை பெற் விண்ணப்பிக்கலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Savings

    அடுத்த செய்தி