ஹோம் /நியூஸ் /வணிகம் /

திருமணமான தம்பதிகளா? ரூ.200 முதலீடு செய்தால் ரூ.72,000 ஓய்வூதியம் பெறலாம்!

திருமணமான தம்பதிகளா? ரூ.200 முதலீடு செய்தால் ரூ.72,000 ஓய்வூதியம் பெறலாம்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள், மாத வருமானம் ரூ.15,000-க்கு மிகாமல் இருப்பவர்கள் மற்றும் அமைப்புசாரா துறையில் (unorganized sector) பணிபுரிபவர்கள் இந்த பென்ஷன் திட்டத்தில் சேர தகுதியுடையவர்கள்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நீங்கள் திருமணமான தம்பதியர் என்றால் உங்களது எதிர்காலத்தில் ஓய்வூதியம் போன்ற நிதி பலன்களை எதிர்பார்க்கிறீர்களா? உங்களுக்கு உதவுகிறது பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் (PM-SYM) திட்டம்.

  இந்த ஓய்வூதிய திட்டம் முதலீடுகளின் மீது பாதுகாப்பை வழங்குவதோடு, நல்ல வருமானத்தையும் அளிக்க கூடியது. அமைப்புசாராத் துறை தொழிலாளர்களின் நலன்களுக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு சில பென்ஷன் ஸ்கீம்களை அறிமுகப்படுத்தியது. இதில் PM-SYM திட்டமானது கடந்த 2019-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் திருமணமான தம்பதிகள் மாதம் வெறும் ரூ.200 மட்டுமே செலுத்துவதன் மூலம் ரூ.72,000 வரை ஆண்டு ஓய்வூதியமாக பெற உதவுகிறது.

  பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் திட்டத்தில் சேர தகுதி:

  18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள், மாத வருமானம் ரூ.15,000-க்கு மிகாமல் இருப்பவர்கள் மற்றும் அமைப்புசாரா துறையில் (unorganized sector) பணிபுரிபவர்கள் இந்த பென்ஷன் திட்டத்தில் சேர தகுதியுடையவர்கள். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட இந்த திட்டமானது பொதுவாக தெருவோர வியாபாரிகள், சலவைத் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், நிலமற்ற தொழிலாளர்கள், கைத்தறித் தொழிலாளர்கள், லெதர் தொழிலாளர்கள், மதிய உணவு திட்ட தொழிலாளர்கள், தலையில் சுமை ஏற்றும் தொழிலாளர்கள், செங்கல் சூளை தொழிலாளர்கள், செருப்புத் தொழிலாளர்கள், வீட்டுப் பணியாளர்கள், ரிக்ஷா இழுப்பவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள். பீடித் தொழிலாளர்கள், உள்ளிட்ட தொழிலாளர்களை உள்ளடக்கியது.

  மேலும் இந்த பென்ஷன் திட்டத்தில் சேர விரும்புபவர்கள் புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS), ஊழியர்களின் மாநிலக் காப்பீட்டுக் கழகம் (ESIC) திட்டம் அல்லது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஆகியவற்றின் கீழ் இருக்க கூடாது. குறிப்பாக வருமான வரி செலுத்துபவராகவும் இருக்க கூடாது.

  முக்கிய அம்சங்கள்:

  - PM-SYM திட்டத்தின் கீழ் சேரும் ஒவ்வொரு சந்தாதாரரும் 60 வயதை அடைந்த பிறகு மாதம் ரூ.3000 உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியம் பெறுவார்கள்.

  - ஓய்வூதியம் பெறும் போது சந்தாதாரர் இறந்தால் அந்த ஓய்வூதியத்தில் 50% குடும்ப ஓய்வூதியமாக பெற வாழ்க்கை துணைக்கு உரிமை உண்டு.

  - PM-SYM திடத்தில் சேருபவர்களின் பங்களிப்புகள் குறிப்பிட்ட நபரின் பேங்க் அக்கவுண்ட் அல்லது ஜன்தன் அக்கவுண்டிலிருந்து ‘ஆட்டோ-டெபிட்’ வசதி மூலம் பெறப்படும். இந்த திட்டத்தில் சேரும் வயதிலிருந்து 60 வயது வரை தனது பங்களிப்பு தொகையை வழங்க வேண்டும்.

  எப்படி சேருவது.?

  தகுதியான நபர்கள் அருகிலுள்ள பொது சேவை மையங்களுக்கு (CSC) சென்று ஆதார் நம்பர் மற்றும் சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்ட்/ ஜன்-தன் அக்கவுண்ட் நம்பரை பயன்படுத்தி செல்ஃப்-சர்டிபிகேஷன் அடிப்படையில் இந்த திட்டத்தில் சேரலாம்.

  செயல்திறன் அடிப்படையில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ள கூகுள்..!

  திருமணமான தம்பதிகள் PM-SYM திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவது எப்படி?

  PM-SYM திட்டத்தில் சேரும் ஒரு தம்பதியர் தனித்தனியாக மாதம் ரூ.100 முதலீடு செய்ய வேண்டும். ஆக மொத்தம் இவர்களிடமிருந்து மாதம் ரூ.200 இந்த திட்டத்திற்கு செல்லும். ஒரு வருடத்தில் தம்பதியரில் ஒருவரின் பங்களிப்பு மட்டுமே வருடத்திற்கு ரூ.1200 ஆக இருக்கும். இருவரின் பங்களிப்பும் சேர்த்து ஆண்டுக்கு ரூ.2400-ஆக இருக்கும். 60 வயது வரம்பை அடைந்த பிறகு, சந்தா செலுத்திய தனிநபர் ஆண்டுக்கு ரூ.36,000 ஓய்வூதிய தொகையைப் பெறத் தகுதியுடையவராக இருப்பார் மேலும் இது திருமணமான தம்பதியருக்கு ரூ.72,000 ஆக இருக்கும்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Money, Pension Plan