ஹோம் /நியூஸ் /வணிகம் /

தினமும் ரூ.417 முதலீடு செய்தால் போதும்... ரூ.1 கோடி வரை முதிர்வுத் தொகை பெறலாம்!

தினமும் ரூ.417 முதலீடு செய்தால் போதும்... ரூ.1 கோடி வரை முதிர்வுத் தொகை பெறலாம்!

நீங்கள் பிபிஎஃப் கணக்கில் தினடும் ரூ.417 என்ற வீதம் மாதந்தோறும் ரூ.12, 500 என 15 ஆண்டுகளுக்கு முதலீடு

நீங்கள் பிபிஎஃப் கணக்கில் தினடும் ரூ.417 என்ற வீதம் மாதந்தோறும் ரூ.12, 500 என 15 ஆண்டுகளுக்கு முதலீடு

நீங்கள் பிபிஎஃப் கணக்கில் தினடும் ரூ.417 என்ற வீதம் மாதந்தோறும் ரூ.12, 500 என 15 ஆண்டுகளுக்கு முதலீடு

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  வாழ்க்கையில் நாம் சேமிக்கும் சிறிய பணம் கூட நமக்கு எதிர்காலத்தில் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதன் காரணமாகத்தான் அனைத்துப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வாழ்க்கையில் தொடக்கத்தில் இருந்தே சிக்கனம் மற்றும் சேமிப்புக்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக “ சஞ்சாயிகா“ எனப்படும் சிறுசேமிப்புத்திட்டம் நடைமுறையில் உள்ளது. இவ்வாறு பள்ளிப்பருவத்தில் இருந்தே மாணவர்களுக்கு சேமிக்கும் பழக்கத்தைக்கற்றுக்கொடுத்தாலும் நிச்சயம் யாரும் வாழ்நாள் முழுவதும் தொடர்வதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

  இந்நிலையில் தான் கொரோனா தொற்றால் பொருளாதார நெருக்கடியை மக்கள் சந்தித்த சூழலில் சேமிப்பு என்பது எவ்வளவு முக்கியத்துவம் என்பதை பெரும்பாலானோர் உணர்ந்துள்ளனர். இதையடுத்து எதில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் பண பிரச்சனை இன்றி வாழலாம்? என்றும் இதோடு பாதுகாப்பான முதலீடுகள் என்னவெல்லாம் உள்ளது? என தேட ஆரம்பித்தனர்.

  இதுபோன்றவர்களுக்காக பல அசத்தல் சேமிப்புத்திட்டங்களை இந்திய அஞ்சல்துறை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான ஒன்றாக பிபிஎஃப் என்பது பொது வருங்கால வைப்பு நிதி. இந்த சேமிப்புத்திட்டத்தின் சிறப்பம்சம் குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

  ரூ.417 முதலீட்டில் ரூ. 1 கோடி வரை லாபம்…

  இந்திய அஞ்சல் துறையில் பிபிஎஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதியில் இந்தியர்கள் யாராக இருந்தாலும் சேமிப்புக் கணக்கைத் தொடங்க முடியும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் இத்திட்டத்தினால் பலன் பெற முடியாது. அதே சமயம் பிபிஎஃப் சேமிப்புக் கணக்கு முதிர்ச்சிக்கு முன் இந்தியர் ஒருவர் வெளிநாடு வாழ் இந்தியர்களாக மாறும் சூழல் ஏற்பட்டால் அவர்கள் பலன் பெற முடியும் என்ற நடைமுறை உள்ளது.

  இதையும் படிங்க : சரசரவென சரிந்த கல்குவாரி.. பாறைக்குள் சிக்கிய தொழிலாளர்கள்.. பகீர் சம்பவம்!

  இத்திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் என்றாலும் 5-5 அதவாது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இரண்டு தடவை நீங்கள் உங்களது பிபிஎஃப் கணக்கை நீடித்துக் கொள்ளலாம். இதற்கான வட்டி விகிதம் 7.1 சதவீதம் வழங்கப்படுகிறது. இந்த நடைமுறைகள் பொதுவானது என்றாலும் எப்படி தினமும் ரூ.417 முதலீடு செய்தால் ரூபாய் 1 கோடி வரை ரிட்டன்ஸ் பெற முடியும்? என கேள்விகள் அனைவருக்கும் எழக்கூடும். இதோ அதற்கான பதில் உங்களுக்காக..

  நீங்கள் பிபிஎஃப் கணக்கில் தினமும் ரூ.417 என்ற வீதம் மாதந்தோறும் ரூ.12, 500 என 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் ரூ.22.50 லட்சம் வரை பெற முடியும். இதற்கான வட்டி விகிதம் 7.1 சதவீதம் என்பதால் ரூ.18 லட்சம் வரை நீங்கள் பெறலாம். இந்த இரண்டையும் சேர்க்கும் போது மொத்தம் ரூபாய் 40.68 லட்சம் உங்களுக்குக் கிடைக்கும். இந்த முதலீட்டையே நீங்கள் 5-5 அதவாது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இரண்டு தடவை நீங்கள் நீட்டிப்பு செய்தால் உங்களுக்கு ரூபாய் 1 கோடி வரை கிடைக்கும்.

  இதையும் படிங்க : ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த சிறுமி... சக்கரத்தில் சிக்காமல் காப்பாற்றிய ஆர்பிஎஃப் வீரர்

  இவ்வாறு மாதந்தோறும் அல்லது தினமும் சிறுக சிறுக சேமிப்பு வைத்தால் நிச்சயம் எதிர்காலத்தில் நல்ல பலன் கிடைக்கும். அதிலும் இதற்கு வரிச்சலுகையும் உள்ளது என்பதால் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் எவ்வித அச்சமும் இன்றி இந்த அஞ்சல் அலுவலக சேமிப்புக்கணக்கை உடனடியாக ஆரம்பித்து பலன் பெறலாம்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Post Office, PPF