முகப்பு /செய்தி /வணிகம் / லோன் கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம்.. பங்குகள் மீதும் கடன் வாங்கலாம்!

லோன் கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம்.. பங்குகள் மீதும் கடன் வாங்கலாம்!

லோன்

லோன்

நீங்கள் உங்களுடைய பங்குகள் அல்லது மியூச்சுவல் ஃபண்டை மொத்தமாகவோ அல்லது பகுதியாகவோ செக்யூரிட்டியாக வைத்து கடன் பெறலாம்

  • Last Updated :
  • Tamil Nadu, India

கடன் வழங்கும் நிறுவனங்களும் வங்கிகளும் உங்களுடைய வருமானத்தின் அடிப்படையில் கடன் வழங்கும். இதற்கு நீங்கள் அடமானமாக எந்த சொத்தையும் வைக்க வேண்டி இருக்காது. ஒரு சில நேரத்தில் உங்களிடம் இருக்கும் ஏதேனும் ஒரு சொத்து அல்லது நகையை செக்யூரிட்டி டெபாசிட்டாக வைத்து, அதன் மீது கடன் பெறலாம். பங்குகள், பரஸ்பர நிதிகள் உள்ளிட்ட பல்வேறு ஈக்விட்டி முதலீடுகள் மீது கூட சில நேரங்களில் கடன் வழங்கப்படும். ஆனால், பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் போன்றவற்றின் மீது கடன் பெறுவது மிக மிக அரிதானது.

உங்களுக்கு அவசர காலத்தில், பொருளாதார சிக்கலில் பணம் தேவைப்படும்போது பங்குகளை விற்காமல் அல்லது மியூச்சுவல் கணக்கை மூடி, முதிர்வு தொகையை பெறாமல் தவிர்க்க இது பெரிய அளவில் உதவி செய்யும். ஆனால் இவ்வாறு கடன் பெறும்போது ஒரு சில முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அதை பற்றிய விவரங்கள் இங்கே.

KYC விவரங்கள் கொண்ட டீமாட் பங்குகள் :

நீங்கள் பங்குகள் மீது கடன் வாங்க வேண்டுமென்றால் உங்களுடைய பங்குகள் டீமேட் கணக்கில் இருக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல், அந்த உங்கள் பங்குகளில் உங்களுடைய KYC விவரங்கள் முழுவதுமாக பதிவாகி இருக்க வேண்டும். நீங்கள் இந்தியரா அல்லது வெளிநாட்டில் வசிக்கும் இந்தியரா, உங்களுடைய ஏஜென்ட் யார் மற்றும் உங்களுடைய வங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்து விவரங்கள் டிமேட் கணக்கில் இணைக்கப்பட்டிருந்தால், அதன் மீது நீங்கள் கடன் வாங்கலாம்.

குழந்தைகளுக்கான சேமிப்பு கணக்கில் சலுகைகளை வாரி வழங்கும் 2 வங்கிகள்..!

அங்கீகரிக்கப்பட்ட பங்குகளுக்கு மட்டுமே கடன் கிடைக்கும் :

யார் வேண்டுமானாலும் எந்த நிறுவனத்தில் வேண்டுமானாலும் பங்குகளை வாங்கலாம். ஆனால் பங்குகள் மீது கடன் வாங்க வேண்டுமென்றால் அது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் பங்குகளாக இருக்க வேண்டும். நீங்கள் பங்குகளை வாங்கிய நிறுவனம் பங்குச்சந்தையின் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். இது மியூச்சுவல் ஃபண்டுகளுக்கும் பொருந்தும். நீங்கள் கடன் வாங்க விரும்பும் பங்குகள் அல்லது மியூச்சுவல் ஃபண்டு வழங்கிய நிறுவனம் பங்குச்சந்தையில் பதிவாக இல்லை அல்லது பட்டியலிடப்படவில்லை என்றால் உங்களுக்கு கடன் கிடைக்காது. முழுக்க முழுக்க அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் வழங்கிய பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டு நிதிகளுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும் இல்லை.

கடனாக வழங்கும் தொகைக்கு வரம்பு உள்ளது :

பொதுவாகவே செக்யூரிட்டியாக ஏதேனும் ஒரு பொருளை அல்லது சொத்தை வைத்து நீங்கள் பணம் வாங்கும் பொழுது அதனுடைய மொத்த மதிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் தான் கடனாக வழங்கப்படும். இது பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளின் மீது வாங்கப்படும் கடனுக்கும் பொருந்தும்.

இவ்வளவு சலுகைகளா..! - புத்தம் புதிய பாலிசியை சந்தையில் இறக்கிய எல்.ஐ.சி

உங்களுடைய சொத்து பங்குகள் அல்லது முதலீட்டில் இருக்கும் மதிப்பில் 50 – 80% தான் உங்களுக்கு அதிகபட்ச கடன் தொகையாக வழங்கப்படும். கடன் வழங்கும் ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு வரம்பை வைத்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் குறைந்தபட்சமாக ₹50,000 முதல் அதிகபட்சமாக ₹200000 வரை கடன் பெறலாம்.

கடனுக்கு வட்டி செலுத்த வேண்டும் :

சொத்துக்களை அடமானமாக வைத்து கடன் வாங்கும்போது கூட அதற்காக வட்டி செலுத்த வேண்டும். எனவே நீங்கள் மியூச்சுவல் பண்டு நிதிகளை வைத்து கடன் வாங்கினால் கூட, அதற்கு உரிய வட்டியைச் செலுத்த வேண்டும். பொதுவாக உங்கள் வருமானத்தின் அடிப்படையில் மட்டும் கொடுக்கப்படும் கடன்களுக்கு அதிக வட்டி இருக்கும். நீங்கள் ஒரு பொருளை செக்யூரிட்டியாக வைத்து வாங்கும் பொழுது அதற்கு வட்டி விகிதம் குறைவாகத்தான் வசூலிக்கப்படுகிறது. வட்டி விகிதம் ஒவ்வொரு வங்கிக்கும் வேறுபடும். தோராயமாக 7 – 15 % வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.

ஒரு சில வங்கிகள் இந்தக் கடனை உங்கள் வங்கிக் கணக்கிற்கு ஓவர் டிராப்ட் ஃபெசிலிட்டியாகவும் வழங்குகிறது. அதாவது நீங்கள் எவ்வளவு தொகையை பயன்படுத்துகிறீர்களோ, அதற்கு மட்டும் வட்டி செலுத்தினால் போதுமானது. உதாரணமாக உங்களுக்கு ₹5,00,000 ஓவர்டிராஃப்ட் ஃபெசிலிட்டி கிடைத்து, நீங்கள் அதில் ₹2,00,000 மட்டும்தான் செலவு செய்திருந்தால், ₹2,00,000 ரூபாய்க்கு மட்டுமே நீங்கள் வட்டி செலுத்தினால் போதுமானது. நீங்கள் பணம் திருப்பி செலுத்தும் போது, ₹2,00,000 மட்டும் செலுத்த வேண்டும். இதையே நீங்கள் கடனாக ₹5,00,000 பெற்றால், திருப்பி செலுத்த வேண்டிய தொகை மற்றும் வட்டி தொகை ஆகியவை ஐந்து லட்சத்தின் அடிப்படையில்தான் கணக்கெடுக்கப்படும்.

மொத்தமாக அல்லது பகுதியாக கடன் பெறலாம் :

நீங்கள் உங்களுடைய பங்குகள் அல்லது மியூச்சுவல் ஃபண்டை மொத்தமாகவோ அல்லது பகுதியாகவோ செக்யூரிட்டியாக வைத்து கடன் பெறலாம். உங்களிடம் 100 பங்குகள் இருந்தால், அதில் நீங்கள் 50 பங்குகளை மட்டும் கடனாக பெறலாம். இவற்றை நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கின் நெட் பேங்கிங் வழியாக கூட செய்யலாம்.

செக்யூரிட்டியாக வைக்கப்பட்ட நிதிகள் / பங்குகளை விற்கவோ டிரேடிங் செய்யவோ முடியாது :

நிதிகள் மற்றும் பங்குகள் மீது கடன் பெற்றால், அவற்றை நீங்கள் விற்க முடியாது அல்லது டிரேடிங் செய்யவோ முடியாது. எப்படி அடமானம் வைக்கப்பட்ட சொத்து அல்லது நகையை நீங்கள் பயன்படுத்த முடியாதோ அதேபோல செக்யூரிட்டியாக வைக்கப்பட்ட நிதிகள் மற்றும் பங்குகள் ஆகியவற்றை நீங்கள் பயன்படுத்த முடியாது; அவற்றை விற்பதற்கும் உங்களுக்கு அதிகாரம் கிடையாது.

நீங்கள் வட்டியை முழுவதுமாக செலுத்தி, கடன் வாங்கிய தொகையை செலுத்திய பிறகு தான் அவை உங்களுக்கு சொந்தமாகும். அதுவரை அந்த பங்குகளை நீங்கள் எதுவும் செய்ய முடியாது.

கடன் செலுத்த தவறினால் என்ன ஆகும்?

கடன் செலுத்த தவறினால், இது செக்யூரிட்டி பெற்றுக் கொண்டு வழங்கப்பட்ட கடன் என்பதால் நீங்கள் செக்யூரிட்டியாக வைத்த பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் நிதிகளை உங்களுக்கு கடன் வழங்கிய வங்கி அல்லது நிதி நிறுவனம் விற்று தங்களுக்கான பணத்தை அதிலிருந்து எடுத்து கொள்ளும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Bank Loan, Mutual Fund