ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தில் ₹ 3675 கோடி முதலீடு செய்ய உள்ள ஜெனரல் அட்லாண்டிக்

இந்தியாவில் மிகப்பெரிய வணிகத்தை கொண்டிருக்கும் ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தில், அமெரிக்காவின் ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனமானது ரூபாய் 3675 கோடி முதலீடு செய்ய உள்ளது.

ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தில் ₹ 3675 கோடி முதலீடு செய்ய உள்ள ஜெனரல் அட்லாண்டிக்
ரிலையன்ஸ் மார்கெட் (கோப்புப்படம்)
  • News18
  • Last Updated: September 30, 2020, 9:38 AM IST
  • Share this:
அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனமானது, இந்தியாவின் ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தின் 0.94 சதவிகித பங்குகளை, ரூ.3675 கோடிக்கு வாங்க உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிட்டட் நிறுவனத்தில், ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தின் மூன்றாவது முதலீடு இதுவாகும். இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வணிகத்தை கொண்டிருக்கும், ரிலையன்ஸ் ரீடெயில் கடைகள் நாடுமுழுவதும் 7 ஆயிரம் நகரங்களில் இயங்கி வருகின்றன.

ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தின் இந்த முதலீடு மூலம், ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தில் மொத்த மதிப்பு ரூ.4.28 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய சந்தைகளைக் கொண்டுள்ள அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு போட்டியாக உள்ள ரிலையன்ஸ் ரீடெயில், இந்த முதலீடு மூலம் தனது வணிகத்தை மேலும் விரிவுபடுத்த இருக்கிறது.



தொழில் முதலீட்டில் 40 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனமானது, முன்னதாக ரிலையன்ஸ் ஜியோவிலும் ரூ.6598 கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
First published: September 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading