Home /News /business /

டாலரின் மதிப்பில் இந்தியாவின் ஜிடிபி மதிப்பு குறைந்துள்ளது- ஆர்பிஐ ஏன் தலையிடவில்லை?- சுப்பிரமணியன் சுவாமி சாடல்

டாலரின் மதிப்பில் இந்தியாவின் ஜிடிபி மதிப்பு குறைந்துள்ளது- ஆர்பிஐ ஏன் தலையிடவில்லை?- சுப்பிரமணியன் சுவாமி சாடல்

சுப்ரமணியன் சுவாமி

சுப்ரமணியன் சுவாமி

கடந்த ஒருவாரத்தில் மட்டும் நாட்டின் ஜிடிபி-யில் ஒரு லட்சம் கோடி டாலர் குறைந்து விட்டது. ரிசர்வ் வங்கி எங்கே என்று சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

    கடந்த ஒருவாரத்தில் மட்டும்  டாலரின் மதிப்பில் நாட்டின் ஜிடிபி மதிப்பு பல ஆயிரம் கோடி டாலர்கள் குறைந்து விட்டது. ரிசர்வ் வங்கி எங்கே என்று சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

    உக்ரைன் ரஷ்யா போரினால் கச்சா எண்ணெய் விலை உயர்கிறது, இந்திய ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக சரிந்து வருகிறது. ஏனெனில் கச்சா எண்ணெய் விலை உயர்வாலும், பாதுகாப்பான முதலீடான தங்கத்தின் பக்கம் பணத்தை செலுத்தவும் முதலீட்டாளர்கள் விரும்புவதால் டாலரின் தேவை அதிகரிக்கிறது. டாலரின் தேவை அதிகரித்ததால், கடந்த சில நாட்களாக டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் சரிந்து வருகிறது. அன்னியச் செலாவணிச் சந்தையில் டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 77ரூபாயாக வீழ்ந்தது.

    பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் பிப்ரவரி மாதத்தில் மட்டும் ரூ.29 லட்சம் கோடியை இழந்துள்ளனர். கச்சா எண்ணெய் உயர்வினால் முதலீட்டாளர்களுக்கு ஒரேநாளில் ரூ. 6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    பொதுவாக ரூபாய் மதிப்பு டாலருக்கு நிகராக சரிவடையும் போது மத்திய ரிசர்வ் வங்கி தனது இருப்பிலிருக்கும் டாலர்களை வெளியிட்டு ரூபாய் மதிப்பை நிலைநிறுத்தச் செய்வது வழக்கம். ஆனால் இந்த முறை ரிசர்வ் வங்கி தலையிடாமல் உள்ளது.

    இதைத்தான் பொருளாதாரத்தில் தேர்ந்தவரான சுப்பிரமணியன் சுவாமி தன் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

    அதாவது, “மத்திய அரசும், பிரதமர் மோடியும் 5 லட்சம் கோடி டாலர் கொண்ட பொருளாதாரமாக தேசத்தை மாற்றுவோம் எனக் கூறி வருகிறார்கள். இப்படிச் சென்றால், அந்த இலக்கு கடினமானதாக மாறிவிடும்.

    இப்போது ரிசர்வ் வங்கியிடம் 64,000 கோடி அமெரிக்க டாலர் கையிருப்பு இருக்கிறது. இப்படி வலிமையாக இருந்தும், டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு சரியும் போது ரிசர்வ் வங்கி தலையிட்டு, அதை ஏன் தடுக்கவில்லை? டாலரின் மதிப்பில் இந்திய ஜிடிபியின் மதிப்பு கடந்தஒரு வாரத்தில் 3 லட்சம் கோடி டாலரிலிருந்து 2.90 லட்சம் கோடி டாலராகக் குறைந்துவிட்டது.

    அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் ரூ.75லிருந்து ரூ.77 ஆகச் சரிந்துவிட்டது. இந்திய ரூபாயின் மதிப்பு 80 ரூபாயாக வீழ்ச்சி அடைந்தால், இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.80லட்சம் கோடி டாலராகக் குறைந்துவிடும், என்று தெரிவித்துள்ளார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Forex reserves rise, RBI, Subramanian Swamy

    அடுத்த செய்தி