இந்திய பொருளாதார வளர்ச்சி கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவு: மத்திய புள்ளியியல் துறை

ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.1 சதவிதமாக குறைந்துள்ளது.

இந்திய பொருளாதார வளர்ச்சி கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவு: மத்திய புள்ளியியல் துறை
மாதிரிப் படம்
  • Share this:
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 44 காலாண்டுகள், அதாவது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஏற்பட்டுள்ளது என்று மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. அதேபோல், 2019-20-ஆம் நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.2 சதவிதமாக குறைந்துள்ளது.

அதற்கு முந்தையை 2018-19-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.1 சதவிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவல் காரணமாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சரிவு இன்னும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டிற்கான முடிவுகள் வரும் போது தான் இந்தியாவில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம் முழுமையாக தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Also see...

கொரோனா ரத்த மாதிரிகளை தூக்கிச் சென்ற குரங்குகள்: அச்சத்தில் உ.பி. மக்கள்





First published: May 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading