Home /News /business /

உலக பணக்காரர்கள் பட்டியல்: 3வது இடத்தில் தொழிலதிபர் அதானி

உலக பணக்காரர்கள் பட்டியல்: 3வது இடத்தில் தொழிலதிபர் அதானி

அதானி

அதானி

உலக பெரும் பணக்காரர்களின் பட்டியலில் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் முதலிடத்தில் நீடிக்கிறார். அவரது சொத்து மதிப்பு 251 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    உலக பணக்காரர்கள் பட்டியலில், இந்திய தொழில் அதிபர் அதானி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். ஆசிய கண்டத்தை சேர்ந்த ஒருவர் உலக பணக்காரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறை.

    ப்ளூம்பெர்க் நிறுவனம் உலக பெரும் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.அதில் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் முதலிடத்தில் நீடிக்கிறார். அவரது சொத்து மதிப்பு 251 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.  இரண்டாம் இடத்தில் உள்ள அமேசான் நிறுவனத் தலைவர் ஜெஃப் பெசோஸ்-சின் சொத்து மதிப்பு 153 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

    கடந்த மாதம் அமெரிக்காவின் பில்கேட்ஸ்-சை பின்னுக்கு தள்ளி 4 இடத்தை பிடித்த அதானி, தற்போது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட்டை பின்னுக்கு தள்ளி 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதானியின் சொத்து மதிப்பு 137 புள்ளி 4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க: 2021ல் இந்தியாவிற்கு ரூ.44,600 கோடி அளவிலான பொருளாதார மதிப்பை உருவாக்கியுள்ள Uber!

    நடப்பு நிதியாண்டில், இதுவரை அதானியின் சொத்து மதிப்பு 60 புள்ளி 9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரித்துள்ளது.  இது மற்ற பெரும் பணக்காரர்களின் வளர்ச்சியை விட 5 மடங்கு அதிகமாகும். ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஒருவர், உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் நுழைவது இதுவே முதல் முறை. அதானி குழுமம் துறைமுகங்கள், தளவாடங்கள், சுரங்கம், எரிவாயு, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் விமான நிலையங்கள் உள்பட பல்வேறு துறைகள் தொடர்பான வணிகங்களில் ஈடுபட்டு வருகிறது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Adani

    அடுத்த செய்தி