ஆசியாவின் பணக்காரரான கௌதம் அதானியின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் ரூ. 20,000 கோடி மதிப்பிலான பங்குகளை ஃபாலோ-ஆன் பப்ளிக் ஆஃபர் மூலம் சந்தையில் விற்க உள்ளதாக பங்குச் சந்தையில் நிறுவனம் முன்மொழிந்துள்ளது.
பொதுவாக ஒரு நிறுவனம் முதல் முறை சந்தைக்கு வந்து தங்கள் பங்குகளை மக்களுக்கு விற்றால் அது ஆரம்ப பொது வழங்கல் (IPO) என்று சொல்லப்படும். அதன் பிறகு ஒரு நிறுவனத்தால் செய்யப்படும் கூடுதல் பங்கு விற்பனை ஃபாலோ-ஆன் பப்லிக் ஆஃபர் (FPO) என்று அழைக்கப்படும். பின்தொடரும் சலுகைகள் இரண்டாம் நிலை சலுகைகள் என்றும் அறியப்படுகின்றன.
அதானி எண்டர்பிரைசஸ், அதன் ரூ.20,000 கோடி ஃபாலோ-ஆன் பொதுப் பங்களிப்பின் (எஃப்பிஓ) மூலம் கிடைக்கும் வருவாயை அதன் வணிக முயற்சிகளில் மூலதனச் செலவு மற்றும் கடன் ஓய்வுக்காகப் பயன்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.
பெரும் தொகையில் ரூ.10,869 கோடி பசுமை ஹைட்ரஜன் & எக்ஸ்பிரஸ்வே திட்டங்களை உருவாக்கவும், விமான நிலைய வசதிகளை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும். ரூ.4,165 கோடியை அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ், அதானி ரோடு டிரான்ஸ்போர்ட் மற்றும் முந்த்ரா சோலார் ஆகிய மூன்று துணை நிறுவனங்களின் கடனைத் திருப்பிச் செலுத்தப் பயன்படுத்தும். மீதமுள்ள தொகை பொது நிறுவன நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் என்று அதானி நிறுவ அறிக்கை குறிப்பிடுகிறது.
அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் கடந்த ஆண்டில் 95% உயர்ந்து 3,596.7 ரூபாயாக உள்ளது. இந்த பங்கு அதன் ஓராண்டு முன் இருந்த வருவாயை விட 141 மடங்கு அதிக மதிப்பீட்டில் வர்த்தகம் செய்யப்படுகிறது. அதேபோல் செப்டம்பர் 30, 2022 நிலவரப்படி, ரூ.40,023.50 கோடி கடன் பெற்றுள்ளது.
பங்கு சந்தையில் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் (AEL) இன் FPO ஜனவரி 27 அன்று திறந்து ஜனவரி 31 அன்று மூட திட்டமிடப்பட்டுள்ளது . மேலும் , நிறுவனம் அதன் ஃபாலோ-ஆன் பங்கு விற்பனையில் முதலீட்டாளர்களுக்கு 10-15% தள்ளுபடியை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
அதன்படி, அனைத்து வகை முதலீட்டாளர்களுக்கும் ஒரு பங்கின் தள விலை 3,112 ரூபாய் என்றும் பங்கு விலையின் உச்சவரம்பு 3,276 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில்லறை முதலீட்டாளர்கள் ஒரு பங்கிற்கு 64 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படும்.
ஃபாலோ-ஆன் விற்பனையில், முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளுக்கு தவணைகளில் பணம் செலுத்தலாம் என்ற வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சலுகை விலையில் 50% முன்பணமாக செலுத்த வேண்டும், அதைத் தொடர்ந்து மீதமுள்ள தொகையை ஒன்று அல்லது இரண்டு தவணைகளில் செலுத்த வேண்டும்.
அதானி நிறுவனம் மும்பை, அகமதாபாத், லக்னோ, மங்களூரு, ஜெய்ப்பூர், கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் ஏழு செயல்பாட்டு விமான நிலையங்களையும், நவி மும்பையில் ஒரு கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தையும் AEL இயக்குகிறது. இந்தியாவில் சாலைகள் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களையும் மேம்படுத்தி வருகிறது.
அடுத்த 10 ஆண்டுகளில் 50 பில்லியன் டாலர்களை பசுமை ஹைட்ரஜன் சுற்றுச்சூழல் அமைப்பிலும் 3 மில்லியன் டன் வரை பச்சை ஹைட்ரஜனை உற்பத்தி செய்யவும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும், குஜராத்தில் உள்ள முந்த்ரா SEZ இல் அதன் சூரிய சக்தித் தொகுதி உற்பத்தி திறன்களை ஆண்டுக்கு 10 GW வரை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Adani, Share Market