Home /News /business /

உலகின் பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானிக்கு 3வது இடம் - சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

உலகின் பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானிக்கு 3வது இடம் - சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

கௌதம் அதானி

கௌதம் அதானி

Gautam Adani | இந்தியாவின் மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யத்தை நடத்தி வரும் அதானி குழுமத்தின் கௌதம் அதானி உலகின் மூன்றாவது பணக்காரர் என்று அறிவிக்கப்பட்டுள்ளார். இதைப் பற்றிய முழு விவரங்கள் இங்கே.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India
உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியர்களும் இடம்பெறுவார்கள். சர்வதேச அளவில் இந்தியாவில் தொழில் துறைகள் மற்றும் வணிகங்கள் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் உலகின் டாப் 10, டாப் 20 பணக்காரர்களின் பட்டியலில் இந்திய பிசினஸ் டைக்கூன்கள் இடம்பெற்று வருகிறார்கள் என்பது ஆச்சரியமே இல்லை. அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யத்தை நடத்தி வரும் அதானி குழுமத்தின் கௌதம் அதானி உலகின் மூன்றாவது பணக்காரர் என்று அறிவிக்கப்பட்டுள்ளார். இதைப் பற்றிய முழு விவரங்கள் இங்கே.

ப்ளூம்பெர்க் பில்லினியர் பட்டியலில், ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஒருவர் மூன்றாவது இடத்தில் இருப்பது இதுவே முதல் முறையாகும். உலகளாவிய ரேங்கிங் பட்டியலில் எலான் மஸ்க் மற்றும் ஜெஃப் பிசோஸ் ஆகியவர்களுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் கௌதம் அதானி இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு $137.4 பில்லியன் ஆகும்.

உலகின் பணக்காரர் பட்டியலில் எலான் மஸ்க் முதல் இடத்தில் இருக்கிறார். டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு, $251 பில்லியன் ஆகும். இதற்கு அடுத்ததாக அமேசானின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஜெஃ ப்பெஸோஸின் சொத்து மதிப்பு $153 பில்லியன் ஆகும். அதானி குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைவரான கௌதம் அதானி மூன்றாவது இடத்தில் இருக்கிறார். உலகப் புகழ்பெற்ற, லக்சுரி தயாரிப்பான லூயி விட்டான் பேஷன் தயாரிப்புகளை வழங்கும் LVMH நிறுவனத்தின் இணை நிறுவனரான பெர்னார்ட் அர்னால்ட் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பின்தங்கியுள்ளார்.



2022 ஆம் ஆண்டில் மட்டுமே கௌதம் அதானியின் சொத்து மதிப்பில் 60.9 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது. இது மற்ற எவரையும் விட ஐந்து மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக 48.50 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.

Also Read : பவர் எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தியிலும் கால் பதிக்கவுள்ள ரிலையன்ஸ் நிறுவனம்!

உலகப் பணக்காரர் பட்டியல் கடந்த ஜூலை மாதம் வெளியானது. அதில் கௌதம் அதானி உலகின் பணக்காரர்களின் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருந்தார். தற்போது வெளியான பட்டியலில் மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைவரான பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி ஒரு ரேங்க் முன்னேறி மூன்றாவது இடத்தில் இருக்கிறார். பில்கேட்ஸ் தனது தொண்டு நிறுவனமான பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு 20 மில்லியன் டாலர் நன்கொடை செய்ய இருப்பதாக தெரிவித்திருந்தார். எனவே அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு 115 மில்லியன் டாலர்களோடு, மூன்றாவது இடத்துக்கு முன்னேறினார்.



உலக பணக்காரர்களின் தரவரிசையில் மூன்றாவது இடத்தை பெற்ற அதானியால் கணிசமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த தரவரிசையில் இடம் பெற்ற முதல் ஆசியர் என்ற பெருமையை அதானி பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் முதலீடுகளின் ஜாம்பவான் என்று அறியப்படும் வாரன் பஃபெட் பணக்காரர் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 91 வயதான வால் ஸ்ட்ரீட் முதலீட்டாளரை விட அதானியின் சொத்து மதிப்பு இரண்டு பில்லியன் டாலர்கள் அதிகம் என்று ஃபோர்ப்ஸ் டேட்டா கூறியுள்ளது.

Also Read : பிக்சட் டெபாசிட் திட்டத்தை விட இதில் வட்டி அதிகம்.. நோட் பண்ணிக்கோங்க!

இந்தியாவில் அதானி குழுமம் பல துறைகளில் செயல்பட்டு வருகிறது. விமான நிலையங்கள் முதல் பசுமை எனர்ஜி வரை அதானி குழுமம் கால் பாதிக்காத துறை இல்லை என்றே கூறலாம். அரசாங்கம் நாடு முழுவதும் பசுமை எனர்ஜியை ஊக்குவித்து வரும் நிலையில், அதானி குழுமம் மாற்று எனர்ஜி வணிகத்தில் கவனம் செலுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய அறுபதாவது பிறந்த நாளின் போது கவுதம் அதானி 60,000 கோடி ரூபாயை நன்கொடை அளிப்பதாக உறுதி அளித்து இருந்தார். இந்த நன்கொடை, சுகாதாரம், கல்வி மற்றும் திறன்களை வளர்ப்பதற்காக செலவிடப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்திய கார்ப்பரேட் வரலாற்றில், பில்லியனர்கள் அளித்த நன்கொடையில் இதுவே மிகப்பெரிய தொகை என்பது குறிப்பிடத்தக்கது!
Published by:Selvi M
First published:

Tags: Adani, Business

அடுத்த செய்தி