கேட்ஸ் ஃபவுண்டேஷனின் தலைவராகும் டாடா குழுமத்தின் முன்னாள் அதிகாரி!

டாடா குழுமத்திற்கு சொந்தமான டாடா ரிலையாட்டி நிறுவனத்தின் தலைமை நிர்வாகப் பொறுப்பை வகித்து வந்தவர் உபேல்.

கேட்ஸ் ஃபவுண்டேஷனின் தலைவராகும் டாடா குழுமத்தின் முன்னாள் அதிகாரி!
உபேல்
  • News18
  • Last Updated: May 3, 2019, 8:09 PM IST
  • Share this:
உலகின் இரண்டாவது மிகப் பெரிய கோடீஸ்வரரான பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவியின் பெயரில் செயல்பட்டு வரும் பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபண்டேஷனின் இந்திய  தலைவராக, டாடா குழுமத்தின் முன்னாள் அதிகாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டாடா குழுமத்திற்கு சொந்தமான டாடா ரிலையாட்டி நிறுவனத்தின் தலைமை நிர்வாகப் பொறுப்பை வகித்து வந்தவர் உபேல். டாடா குழுமத்தில் இவர் 10 வருடங்களுக்கும் அதிகமாகத் தனது பணியைச் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் பில் & மெகிண்டா கேட்ஸ் ஃபண்டேஷனின் இந்திய கொள்கை இயக்குனராக உபேல் விரைவில் பதவி ஏற்க உள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன.


சியாட்டில்-ஐ தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனமான மெலிண்டா கேட்ஸ் ஃபண்டேஷனின் இந்திய ஹெல்த்கேர், வறுமை ஒழிப்பு மற்றும் கல்வி நடவடிக்கைகளை உபேல் கவனிப்பார் என்று தகவல்கள் கூறுகின்றன.

மேலும் பார்க்க:
First published: May 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading