கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு..!

கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு..!
கோப்பு படம்
  • Share this:
நாடு முழுவதும்  மானியமில்லாத கேஸ் சிலிண்டரின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி மானியமில்லாத சிலிண்டரின் விலையில் 19 ரூபாய் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணை விலை நிலவரத்துக்கு ஏற்ப மாதம்தோறும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.

அந்த வகையில் சென்னையில், 14 கிலோ 200 கிராம் எடைகொண்ட மானியம் இல்லாத எரிவாயு சிலிண்டர் விலை இதுவரை 714 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அது 19 ரூபாய் விலை உயர்ந்து இனி 734-க்கு விற்கப்படும்.


இந்த விலை ஏற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் மானியமில்லாத சிலிண்டர் விலை 144 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 19 கிலோ எடை கொண்ட மானியமில்லாத சிலிண்டர் விலை தற்போது ஆயிரத்து 362 ரூபாயாக உயர்ந்துள்ளது.

 
First published: January 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்