முகப்பு /செய்தி /வணிகம் / குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகளின் முழு விவரம் ..

குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகளின் முழு விவரம் ..

ஹோம் லோன்

ஹோம் லோன்

இந்திய ரிசர்வ் வங்கி வெகு விரைவில் மானிட்டரி பாலிசி குறித்து அறிவிப்பு வெளியிட இருக்கிறது.

இந்திய ரிசர்வ் வங்கி வெகு விரைவில் மானிட்டரி பாலிசி குறித்து அறிவிப்பு வெளியிட இருக்கிறது. இதனால், அனைவரின் கவனமும் வீட்டுக் கடன் மீதான வட்டி குறித்து திரும்பியுள்ளது. எதிர் வரும் நாட்களில் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்று வீட்டுக் கடன் சார்ந்த தொழில் துறையினர் கருதுகின்றனர். ஆனால், அது உடனடியாக நடைபெற வாய்ப்பில்லை.

இந்தியாவின் மாபெரும் கடன் வழங்கும் நிறுவனமான ஹெச்டிஎஃப்சி உடன் ஹெச்டிஎஃப்சி வங்கி இணைக்கப்பட்டுள்ளதன் எதிரொலியாக கடன் ஆவணங்கள் குறித்த பேச்சு கிளம்பியுள்ளது.

வீட்டுக் கடன் வழங்கி வரும் அரசுடைமை வங்கியான பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியில் வீட்டுக் கடன் மிகக் குறைந்த வட்டியில் வழங்கப்படுகிறது. பல்வேறு நிறுவனங்களை ஒப்பீடு செய்து இந்தத் தகவலை பாங்க்பசார் நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த வங்கியில் ரூ.75 லட்சத்திற்கான வீட்டுக் கடனை 20 ஆண்டு கால தவணைத் திட்டத்தில் பெறும் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆண்டுக்கு 6.4 சதவீத வட்டி வசூல் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் ரூ.55,477 தவணைத் தொகையாக வசூல் செய்யப்படுகிறது.

குறைந்த வட்டியில் கடன் வழங்கும் பிற பொதுத்துறை வங்கிகள்:

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூகோ வங்கி, இந்தியன் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா மற்றும் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு 6.5 சதவீத வட்டியில் வீட்டுக் கடன் வழங்கப்படுகிறது. இந்த வங்கிகளில் நீங்கள் 20 ஆண்டுகால தவணையில் ரூ.75 லட்சத்திற்கு வீட்டுக் கடன் பெற்றீர்கள் என்றால், உங்களுக்கான மாதாந்திர தவணை தொகை ரூ.55,918 ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது.

also read : இந்த மாதத்தில் இருந்து மாற்றத்திற்கு வரும் பிஎஃப் விதிகள்.. நீங்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை

குறைந்த வட்டியில் கடன் வழங்கும் தனியார் வங்கி:

வாடிக்கையாளர்களுக்கு மிகக் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் முதல் 10 வங்கிகளின் பட்டியலில் கோடக் மஹிந்திரா வங்கியும் இடம்பெற்றுள்ளது. இது தனியார் வங்கியாகும். இங்கு வாடிக்கையாளர்கள் ஒருவர் ரூ.75 லட்சம் வீட்டுக் கடனை 20 ஆண்டு கால தவணையில் செலுத்தும்படி பெற்றார் என்றால், அவருக்கு 6.55 சதவீத வட்டி விதிக்கப்படுகிறது. மாதாந்திர தவணை தொகை ரூ.56,139 ஆகும்.

also read : எச்டிஎஃப்சி, எச்டிஎஃப்சி வங்கி இணைப்பு : வீட்டுக் கடன் வசதி அதிகரிக்க வாய்ப்பு

யூனியன் பேங்க் மற்றும் கனரா வங்கியில்...

பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 20 ஆண்டுகால தவணையில் ரூ.75 லட்சம் கடன் பெறும்போது 6.60 சதவீத வட்டி விதிக்கப்படுகிறது. இங்கு மாதாந்திர சந்தா தொகை ரூ.56,360 ஆகும். இதேபோன்று கனரா வங்கியில் 6.65 சதவீத வட்டியுடன் வீட்டுக் கடன் வழங்கப்படுகிறது. இங்கு மாதாந்திர தவணை தொகை ரூ.56,582 ஆகும்.

தேசிய வீட்டு வசதி வங்கியின் இணையதளத்தில், தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மற்றும் வீட்டுக் கடன் நிதி நிறுவனங்கள் ஆகியவை குறிப்பிட்டுள்ள தகவல்களின்படி இந்தப் பட்டியலை பாங்க்பஸார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

First published:

Tags: Home Loan