முகப்பு /செய்தி /வணிகம் / மூத்த குடிமக்களுக்கு ரூ.9,250 வரை மாதாந்திர ஓய்வூதியம் வழங்கும் PMVVY திட்டம் - தகுதி முதல் பலன்கள் வரை!

மூத்த குடிமக்களுக்கு ரூ.9,250 வரை மாதாந்திர ஓய்வூதியம் வழங்கும் PMVVY திட்டம் - தகுதி முதல் பலன்கள் வரை!

ஓய்வூதிய திட்டம்

ஓய்வூதிய திட்டம்

PMVVY Schemes : மூத்த குடிமக்களுக்கு மாதந்திர ஓய்வூதியம் வழங்கும் மத்திய அரசின் PMVVY திட்டம் பற்றிய முழுமையான விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த 2017-ஆம் ஆண்டு மத்திய அரசால் மூத்த குடிமக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா (PMVVY - Pradhan Mantri Vaya Vandana Yojana). மூத்த குடிமக்களை கருத்தில் கொண்டு இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) மூலம் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

முதுமையின் போது மூத்த குடிமக்களுக்கு போதுமான சமூக பாதுகாப்பை வழங்குவதற்கும், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வட்டி வருமானம் குறையாமல் பாதுகாக்கவும் இந்த திட்டம் உதவுகிறது. இது ஒரு ஓய்வூதிய திட்டமாகும். LIC-க்கு அரசு உத்தரவாதத்தின் அடிப்படையில் சந்தா தொகையுடன் இணைக்கப்பட்ட உறுதியான ஓய்வூதியம் அல்லது வருமானத்தை வழங்குவதன் மூலம் மூத்த குடிமக்களுக்கு இந்த திட்டம் வருமான பாதுகாப்பை வழங்குகிறது. வட்டி விகிதங்கள் குறையும் போது மூத்த குடிமக்களுக்கு வழக்கமான ஓய்வூதியம் வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்த திட்டம் எப்போது முதல் எப்போது வரை கிடைக்கும் என்ற காலத்தை அரசு அவ்வப்போது அறிவிக்கிறது. அந்த வகையில் சமீபத்திய அறிவிப்பின்படி இந்த திட்டம் மார்ச் 31, 2023 வரை பயன்படுத்தி கொள்ள கிடைக்கிறது. எல்ஐசி மூலம் செயல்படுத்தப்படும் இந்த PMVVY திட்டம் மாதாந்திர / காலாண்டு / அரையாண்டு மற்றும் வருடாந்திர அடிப்படையில் ஓய்வூதியத்தை தேர்ந்தெடுக்கும் விருப்பத்துடன், உத்தரவாதமான வருவாய் விகிதத்தின் அடிப்படையில் உறுதிசெய்யப்பட்ட பென்ஷன் நிதியை வழங்குகிறது.

திட்டத்தில் சேர தகுதி:

PMVVY திட்டத்தை பயன்படுத்தி கொள்ள விரும்புவோரின் குறைந்தப்பட்ச வயது 60 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும். அதிகப்பட்ச வயது வரம்பு இல்லை. இந்த பாலிசியின் காலம் 10 ஆண்டுகள். இதில் சேரும் நபர் ஒவ்வொரு மாதமோ, காலாண்டுக்கு ஒருமுறை அல்லது 6 மாதங்கள் மற்றும் 12 மாதங்களுக்கு ஒருமுறை முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச ஓய்வூதியமாக முறையே மாதம் ரூ.1,000, காலாண்டுக்கு ரூ.3,000, அரையாண்டுக்கு ரூ6,000 மற்றும் ஆண்டுக்கு ரூ.12,000 என பேசலாம்.

அதிகபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ 9,250, காலாண்டுக்கு ரூ.27,750, அரையாண்டு ரூ.55,500 மற்றும் ஆண்டுக்கு ரூ.1,11,000-ஆக இருக்கும். கடந்த 2018-ல் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை இந்த திட்டத்திற்கான முதலீட்டு வரம்பை ரூ.7.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக அதிகரிக்க ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து ஆண்டுக்கு ரூ.12,000 ஓய்வூதியம் பெற குறைந்தபட்ச முதலீடு ரூ.1,56,658-ஆக திருத்தப்பட்டது.

10 வருட காலப்பகுதியில் எந்த நேரத்திலும் ஓய்வூதியம் பெறுபவர் இறந்தால், சட்டப்பூர்வ வாரிசுகள்/நாமினிகளுக்கு Purchase Price திருப்பி அளிக்கப்படும். குடியுரிமை பெற்ற இந்தியர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் இணைய தகுதியுடையவர்கள்.

Also Read : போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு கணக்கில் எவ்வளவு பணம் இருக்கு..! ஈசியா தெரிந்துக்கொள்வது எப்படி..?

அம்சங்கள்:

1. மருத்துவ பரிசோதனை தேவையில்லை

2. பாலிசி காலத்தின் போது, சுய அல்லது வாழ்க்கைத் துணை தீவிர நோய்களால் பாதிக்கப்படுவது போன்ற விதிவிலக்கான சூழலில் பிளானை விட்டு முன்கூட்டியே வெளியேற அனுமதிக்கப்படுகிறது. இத்தகைய சந்தர்ப்பங்களில் செலுத்த வேண்டிய சரண்டர் மதிப்பு பிளானின் கொள்முதல் விலையில் 98% ஆகும்.

3. பாலிசி ஆண்டுகள் முடிந்த பிறகு பாலிசியின் கீழ் கடன் கிடைக்கும். அதிகபட்ச கடனாக கொள்முதல் விலையில் 75% வரை வழங்கப்படும்.

2022-23 நிதியாண்டில், இத்திட்டம் ஆண்டுக்கு 7.40% உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியத்தை மாதந்தோறும் வழங்குகிறது. இந்த பாலிசியை ஆஃப்லைனில் அல்லது எல்ஐசியின் அதிகாரப்பூர்வ வெப்சைட் மூலம் எடுக்கலாம்.

First published:

Tags: Central government, Pension Plan, Savings