Home /News /business /

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 85.61-ஆக உயர்வு

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 85.61-ஆக உயர்வு

பெட்ரோல் பங்க்

பெட்ரோல் பங்க்

சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு ரூ. 85. 61 காசுகளாகவும், டீசல் விலை ரூ.78 .90 காசுகளாகவும் அதிகரித்துள்ளன. 

  • News18
  • Last Updated :
    சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு ரூ. 85. 61 காசுகளாகவும், டீசல் விலை ரூ.78 .90 காசுகளாகவும் அதிகரித்துள்ளன. 

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் அதிகரித்து 85 ரூபாய் 61 காசுகளாகவும், டீசல் விலை 29 காசுகள் அதிகரித்து 78 ரூபாய் 90 காசுகளாகவும் உள்ளன.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு


    இதேபோல் கடலூரிலும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் அதிகரித்து,  87 ரூபாய் 46 காசுக்கு விற்பனையாகிறது. டீசல் விலை லிட்டர் 29 காசுகள் உயர்ந்து 80 ரூபாய் 62 காசுகளுக்கும் விற்பனையாகிறது. கடந்த 5-ம் தேதி பெட்ரோல், டீசல் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் ஒரு ரூபாய் குறைத்தன. இந்நிலையில் கடந்த 6 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை 91 காசுகளும், டீசல் விலை ஒரு ரூபாய் 79 காசுகளும் உயர்ந்துள்ளன. தொடர்ந்து மாற்றம் சந்தித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ALSO WATCH...

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Chennai, Cuddalore, Diesel Price Rs.78.90, Fuel Price Increased, Petrol Price Rs.85.61

    அடுத்த செய்தி