பெட்ரோல், டீசல் விலைகள் சதம் அடித்த போதிலும், அப்போதும் கட்டுப்படாமல் தொடர்ந்து அவற்றில் விலை அதிகரித்து வருவது வாகன ஓட்டிகளை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது, ஆனால் இந்த விலையேற்றத்தில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள ஒரு எளிய வழி உள்ளது. அது குறித்து தற்போது அறிந்து கொள்வோம்.
சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் மாற்றங்களை சந்தித்து வருகின்றன. முன்பெல்லாம் மாதம் இரு முறை விலை மாற்றம் இருந்து வந்த நிலையில் தற்போது எண்ணெய் நிறுவனங்களே விலைகளில் மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு அனுமதித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இதுவரை இல்லாத புதிய உச்சங்களை பெட்ரோல், டீசல் பார்த்து வருகிறது. சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும், மாவட்டங்களிலும் கூட பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. டீசல் விலையும் விரைவில் 100 ரூபாயை தொடும் என்றே கருதப்படுகிறது. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையேற்றம் வாகன ஓட்டிகளை வெகுவாக பாதித்திருக்கிறது. தினசரி வாகனங்களை பயன்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களின் மாத பட்ஜெட்டில் பெரிய அளவில் துண்டு விழுந்துள்ளது.
Also Read: பூமியின் அழிவு எப்போது?: சரியாக கணித்த ஆராய்ச்சியாளர்கள்!
இருப்பினும் பெட்ரோல் கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் இந்த விலையேற்றத்தை ஓரளவு சமாளிக்க இயலும்.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து ஹெச்டிஎஃப்சி, எஸ்பிஐ போன்ற வங்கிகள் எரிபொருளுக்கென பிரத்யேக கிரெடிட் கார்டை வழங்குகின்றன. இந்த கிரெடிட் கார்டுகளை பெட்ரோல் அல்லது டீசலுக்காக பயன்படுத்தும் போது, குறிப்பிட்ட சலுகையை ரிவார்ட் பாயிண்டுகளாக இந்நிறுவனங்கள் வழங்குகின்றன. இந்த ரிவார்ட் பாயிண்டுகளை அதிகமாக பெற்று பின்னர் அதன் மூலம் எரிபொருளாகவோ அல்லது கேஷ் பேக்காகவோ பெற்றுக்கொள்ள முடியும். இருப்பினும் ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு விதமான நடைமுறைகளை பின்பற்றி வருகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
Also Read: சுனில் கவாஸ்கரின் உலக சாதனையை முறியடித்த சச்சினுக்கு தங்க கைக்கடிகாரம் பரிசு - சுவாரஸ்ய நினைவலைகள்!
உதாரணமாக IndianOil HDFC வங்கி கிரெடிட் கார்டினை IndianOil பம்புகளில் பயன்படுத்தும் போது 5% சலுகை அளிக்கப்படுகிறது.
BPCL SBI Card Octane கிரெடிட் கார்டு மூலம் BPCL பம்புகளில் பெட்ரோல், டீசல் போடும்போது ஒவ்வொரு 100 ரூபாய் பரிமாற்றத்திற்கும் 25 ரிவார்ட் பாயிண்டுகள் அளிக்கப்படுகின்றன.
இதே போல IndianOil Citi வங்கி கிரெடிட் கார்டினை IndianOil பம்புகளில் பயன்படுத்தும் போது ஒவ்வொரு 150 ரூபாய் பரிமாற்றத்திற்கும் 4 ரிவார்ட் பாயிண்டுகள் அளிக்கப்படுகின்றன.
Also Read: சச்சின் மகன் தோனியின் ஆசிரியர் பணி விண்ணப்பம்... ரசிகர்கள் குழப்பம்!
மேலும், ஒவ்வொரு கார்டுக்கும் ஒவ்வொரு விதமான சலுகையை பெற முடியும். ரிவார்ட் பாயிண்டுகளை பயன்படுத்தி ஷாப்பிங் செய்து கொள்ளவும் வழிவகை உள்ளது.
இதில் முக்கியமான ஒன்றை கவனிக்க வேண்டும், எந்த எண்ணெய் நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் இந்த கிரெடிட் கார்டு உள்ளதோ அந்த நிறுவன பங்குகளில் பயன்படுத்தினால் தான் மேற்கூறப்படும் சலுகைகளை பெற முடியும். ஒரு சில வங்கியின் கிரெடிட் கார்டில் மாதம் பயன்படுத்தப்படும் தொகைக்கு தரப்படும் சலுகைக்கு உச்சவரம்பும் உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஃபியூயல் கிரெடிட் கார்டுகளுக்கு ஆண்டு சந்தாவும் வசூலிக்கப்படலாம். எந்த நிறுவனத்தின் கார்டுகளை பெறுகிறீர்களோ அந்த நிறுவனம் கூறும் விதிமுறைகளை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு பின்னர் கிரெடிட் கார்டை வாங்குவது சரியாக இருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Credit Card, Diesel, Petrol, Petrol Diesel Price, Petrol-diesel