இந்த முதலீடு சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கிய சில ஆண்டுகளில், 'பிக் புல்' மற்றும் இந்தியாவின் வாரன் பஃபெட் போன்ற பெயர்களைப் பெற்ற ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தனது 62 ஆவது வயதில் நேற்று காலமானார். அவர் இறக்கும் போது அவரது சொத்து மதிப்பு சுமார் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
கடந்த 1985 இல் வெறும் ரூ. 5,000 போர்ட்ஃபோலியோவுடன் தொடங்கிய ஜுன்ஜுன்வாலா, இந்தியாவின் மிகப்பெரிய பங்குச் சந்தை முதலீட்டாளராக ஆனார். தொடர்ந்து 2018 இல் அவருடைய போர்ட்ஃபோலியோவை ரூ.11,000 கோடியாக உயர்த்தினார்.
ஜுன்ஜுன்வாலா ஒரு பங்கைப் பற்றி பேசினால், அது மற்ற முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாகவும் பணம் போட வைப்பதாகவும் இருந்துள்ளது. அதற்கு சமீபத்திய உதாரணமாக டைட்டன் பங்கு அமைந்தது. அந்த அளவிற்கு பங்கு சந்தையின் புலியாகவே வலம் வந்தார்.
சுதந்திர தினத்திற்காக வெளியிடப்படும் மெய்நிகர் 3டி தபால்தலைகள்
1985 இல் சிடன்ஹாம் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, ஜுன்ஜுன்வாலா இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தில் சேர்ந்தார். அப்போது தொடங்கிய பங்கு முதலீட்டுப் பயணம் அவரை இவ்வளவு உச்சத்திற்குக் கொண்டுசேர்த்துள்ளது.
அவரது முதல் பெரிய லாபம் என்று சொன்னால் டாடா டீயில் இருந்து வந்ததைத் தான் சொல்ல வேண்டும். 1986 இல் ஒரு பங்கு 46 ரூபாய் என்று 5000 ரூபாய்க்கு வாங்கினார். மூன்று மாதங்களில் ஒரு பங்கு 146 ரூபாய்க்கு உயர்ந்தது. இன்றுவரை அவரது மிகப்பெரிய முதலீடு என்பது டைட்டனில் அவர் செய்த ரூ. 7,000 கோடியாகக் கூறப்படுகிறது.
இவை தவிர, ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், அரபிந்தோ பார்மா, அயன் எக்ஸ்சேஞ்ச், லூபின், ஜியோஜித் ஃபைனான்சியல் சர்வீசஸ், விஐபி இண்டஸ்ட்ரீஸ், ராலிஸ் இந்தியா, ஜூபிலண்ட் லைஃப் சயின்சஸ் போன்றவற்றில் அவரது முதலீடுகள் உள்ளன.
கடந்த 2008 இல் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையில் அவரது பங்கு நிலைகள் வீழ்ச்சியைக் கண்டபோதும், அவர் 2012 இல் அந்த இழப்புகளை மொத்தமாக மீட்டெடுத்தார். ஜுன்ஜுன்வாலா, ஒரு தொழில்முனைவோராக தனது முயற்சிகள் மற்றும் பங்குகள் மூலம், நாட்டின் பணக்காரர்களில் ஒருவராக உயர்ந்தார்.
கடன் கேட்டு இரவு 7 மணி முதல் காலை 8 மணி வரை அழைக்கக்கூடாது.. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு!
கடந்த வாரம் தொடங்கப்பட்ட ஆகாசா ஏர் நிறுவனத்தில் ஜுன்ஜுன்வாலா சமீபத்தில் முதலீடு செய்தார். அவர் ஆகாசா விமானம் குறைந்த விலை விமானம் அல்ல. ஆனால் மிகச் சிக்கனமான விமான நிறுவனம் என்று அழைத்து வந்தார்.
தொடங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, ஜுன்ஜுன்வாலா தோல்விக்குத் தயாராக இருப்பதாகக் கூறியபோதும், எதிர்காலத்தில் விமானப் பங்குகள் உயரும் என்று அவர் நம்பிக்கை கொண்டிருந்தார்.
தற்போதைய உலகளாவிய மந்தநிலைக்கு மத்தியில் இந்திய சந்தைகளில், சவால்கள் இருந்தபோதிலும் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து வளர்ச்சியடையும் என்று ஜுன்ஜுன்வாலா சாதகமாக நம்புவதாகவும், உலக முன்னேற்றங்களைப் பொருட்படுத்தாமல் (உள்நாட்டு) பங்குச் சந்தைகள் வளரும் என்றும் அவர் அளித்த சமீபத்திய பேட்டியில் கூறினார். மேலும், பொதுத்துறை வங்கிகள் தான் தனது பந்தயம் என்றும் ஜுன்ஜுன்வாலா கூறியிருந்தார்.
ஜுன்ஜுன்வாலா ஒரு முதலீட்டாளராக அவரது தொலைநோக்கு பார்வைக்காகவும் மற்றும் நம்பிக்கைக்காவும், இந்திய சந்தைக்கான அவரது நம்பிக்கையான கண்ணோட்டத்திற்காகவும் முதலீட்டாளர் சந்தையால் நினைவுகூரப்படுவார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Economy, Stock market, Stock market investor