ஹோம் /நியூஸ் /வணிகம் /

தீபாவளி முடிஞ்சதும் ட்விஸ்ட்.. விலை ஏறப்போகுது ஸ்மார்ட்போன்.! ஏன் தெரியுமா ?

தீபாவளி முடிஞ்சதும் ட்விஸ்ட்.. விலை ஏறப்போகுது ஸ்மார்ட்போன்.! ஏன் தெரியுமா ?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தற்போது கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் பார்த்தல், அடுத்த மாதம் முதல் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அக்டோபர் அல்லது டிசம்பர் மாத இறுதிக்குள் ஸ்மார்ட் போன்களின் விலை அதிகரிக்கலாம் என்ற செய்தி வெளியாகி, இந்தியாவில் உள்ள ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

  மற்ற நாடுகளை விட இந்தியாவில் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் மிக குறைவாகவே விலையிலேயே கிடைக்கின்றது. ஒருவர் விரும்பினால் வெறும் நான்காயிரத்தில் இருந்து ஐந்தாயிரம் விலையில் கூட ஸ்மார்ட்போனை வாங்க முடியும். அதிலும் ஜயோ நிறுவனம் 2500 ரூபாய்க்கு ஜயோ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி சந்தையில் புரட்சியை ஏற்படுத்தியது. இது எளிய மக்களுக்கும் ஸ்மார்ட்போன் வாங்க விரும்புபவர்களுக்கும் வரப்பிரசாதமாக அமைந்தது. ஆனால் தற்போது கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் பார்த்தால், அடுத்த மாதம் முதல் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  தீபாவளி பண்டிகைகள் நெருங்கி வரும் வேளையில் பண்டிகை கால சலுகைகளைமுன்னிறுத்தி, அனைத்து நிறுவனங்களும் தங்களது ஸ்மார்ட்போன்களை மிகக் குறைந்த விலைக்கு விற்று தீர்த்து வருகின்றன. முக்கியமாக ஏற்கனவே கிடப்பில் போடப்பட்டுள்ள மொபைல்களை முதலில் விற்பனை செய்துவிடுவதே அவர்களின் குறிக்கோளாக உள்ளது. ஆனால் இந்த மாதம் முடிந்த பிறகு பண்டிகை கால சலுகைகள் பலவும் முடிவுக்கு வரும் என்பதால், அடுத்த மாதம் முதல் செல்போன் நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்துவதற்கு முடிவு செய்துள்ளன.

  Read More : வட்டி மட்டுமே ரூ.36,000 கிடைக்கும்.. காலத்துக்கும் நின்னு பேசும் எல்.ஐ.சியின் ஜீவன் உமாங் பாலிசி!

  மேலும் உலக அளவில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதும் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதும் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதற்கான கட்டணம் அதிகரித்திருப்பதால் ஸ்மார்ட்போன்களின் விற்பனை விலையும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  சமீபத்தில் கிடைத்த அறிக்கையின்படி அடுத்த மாதம் முதல் ஸ்மார்ட்போன்களின் விலையானது ஐந்து முதல் ஏழு சதவீதம் வரை உயர்வதற்கு வாய்ப்புகள் உண்டு என தெரியவந்துள்ளது. தற்போது ஸ்மார்ட் போன்கள் விற்கப்படும் சராசரி விற்பனை விலையான 17,000திலிருந்து, இந்த விலை ஏற்றத்திற்கு பின் இருபதாயிரம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் விலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

  அமெரிக்க டாலரோடு ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட 82 ரூபாயை தொட்டு விட்டது. இதனால் ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வேலைகளை அதிக தொகை கொடுத்து செய்ய வேண்டியதாக உள்ளது. இவை நேரடியாக பொருட்களின் விற்பனை விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

  எனவே ஒரு வேலை நீங்கள் ஸ்மார்ட்போன் வாங்க முடிவு செய்து இருந்தால், அதனை முடிந்த அளவு விரைவாக இந்த மாதத்திற்குள்ளாகவே வாங்கிவிடுங்கள். முக்கியமாக பண்டிகை கால சலுகைகள் இருக்கும் பொழுது இவற்றை வாங்கி விடுவது அதிக அளவு பணம் சேமிப்பதற்கு உதவும்.. மேலும் தற்போது இருப்பில் இருக்கும் ஸ்மார்ட்போன்களை விற்கும் வரை மட்டுமே இந்த விலை சலுகை இருக்கும். அதன் பின் வெளிநாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன்களுக்கு அதிக தொகை செலுத்த வேண்டி இருப்பதால், இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  ஏற்கனவே பல முக்கிய ஸ்மார்போனகளின் விலை அதிகரித்துள்ளதை சமீப காலங்களில் பார்க்க முடிகிறது. முக்கியமாக ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளான ஐபோன்கள் மற்றும் ஐபேடுகளின் விலை அதிகரித்துள்ளது. ஐபோன் SE 2022 மாடல் இந்தியாவில் 49,900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதன் வரிசையில் நடுத்தர மக்களின் முக்கிய தேர்வாக இருக்கும் , சியோமி, விவோ, ரியல்மி, ஒன் பிளஸ், சாம்சங் ஆகிய நிறுவனங்களும் தங்களின் ஸ்மார்ட்போன்களுக்கான விலை உயர்வை கூடிய விரைவில் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  மேலும் தற்போது 5g சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 5g ஸ்மார்ட்போன்களுக்கான மார்க்கெட் சூடு பிடித்துள்ளது. எனவே சராசரி அடிப்படை விலையானது 15 ஆயிரத்தை தொட்டுள்ளது. எனவே ஸ்மார்ட்போன்களுக்கு வரவுள்ள இந்த விலை ஏற்றமானது மக்களை சாதாரண போன்களை நோக்கி திரும்ப வைக்கலாம் என்றும் ஸ்மார்ட் போன்கள் விற்கும் நிறுவனங்களுக்கு மிகப்பெரும் அடியாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Business, Smartphone, Technology