Home /News /business /

ஜூலை 1 முதல் RTGS, NEFT பணப் பரிவர்த்தனைக் கட்டணம் குறைய வாய்ப்பு!

ஜூலை 1 முதல் RTGS, NEFT பணப் பரிவர்த்தனைக் கட்டணம் குறைய வாய்ப்பு!

 ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

ஆன்லைன் வங்கி சேவைகளில் 2 லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்ப NEFT சேவையும், அதற்கும் கூடுதலான தொகையை அனுப்ப RTGS சேவையும் பயன்படுத்தப்படுகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் RTGS, NEFT மூலம் செய்யப்படும் அனைத்து பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தையும் ஜூலை 1-ம் தேதி முதல் குறைக்க உள்ளதாகவும், அதன் நன்மைகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

    ஆன்லைன் வங்கி சேவைகளில் 2 லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்ப NEFT சேவையும், அதற்கும் கூடுதலான தொகையை அனுப்ப RTGS சேவையும் பயன்படுத்தப்படுகிறது.

    ஆர்பிஐ வெளியிட்டுள்ள இந்த கட்டணக் குறைப்பால் வங்கி நிறுவனங்கள், ஜூலை 1 முதல் RTGS, NEFT பண பரிவர்த்தனை கட்டணங்களை குறைப்பதாக அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு உள்ளது.

    இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ, NEFT பரிவர்த்தனை செய்ய 1 முதல் 5 ரூபாய் வரையிலும், RTGS பரிவர்த்தனை செய்ய 5 முதல் 50 ரூபாய் வரையிலும் கட்டணமாக வசூலிக்கிறது.

    நடப்பு நிதியாண்டின் 2-வது நாணய கொள்கைக் கூட்டம் ஜூன் 6-ம் தேதி நடைபெற்றது. அதில் RTGS, NEFT பண பரிவர்த்தனைக் கட்டணங்களைக் குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அதை உறுதி செய்யும் விதமாக ஆர்பிஐ ஜூலை 1 முதல் RTGS, NEFT கட்டணத்தை வங்கிகள் குறைக்கும் என்று அறிவித்துள்ளது.

    ஆனால் RTGS, NEFT கட்டணங்கள் எவ்வளவு குறையும் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

    மேலும் பார்க்க:
    Published by:Tamilarasu J
    First published:

    Tags: RBI, RTGS Transaction

    அடுத்த செய்தி