முகப்பு /செய்தி /வணிகம் / 500 கோடீஸ்வரர்களை உருவாக்கிய Freshworks நிறுவனம் - ரஜினிக்கு நன்றி சொல்லும் சாதனை தமிழர் கிரிஷ் மாத்ருபூதம்!

500 கோடீஸ்வரர்களை உருவாக்கிய Freshworks நிறுவனம் - ரஜினிக்கு நன்றி சொல்லும் சாதனை தமிழர் கிரிஷ் மாத்ருபூதம்!

Girish Mathrubootham

Girish Mathrubootham

அந்நிறுவனத்தின் பங்குதாரர்களான 500 ஊழியர்கள் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். இதில், 70 பேர் 30 வயதிற்குட்பட்டவர்கள். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சென்னையில் தொடங்கப்பட்டு கலிஃபோர்னியாவில் செயல்படும் மென்பொருள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள FRESHWORKS நிறுவனம் அமெரிக்க பங்குச் சந்தையான  நாஸ்டாக்கில் (Nasdaq) பட்டியலிடப்பட்டுள்ளது. பங்கு விற்பனையின் மூலம் அந்நிறுவனத்தின் 500 பணியாளர்கள் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர்.

சென்னையில் 2010-ஆம் ஆண்டில் கிரிஷ் மாத்ருபூதம் மற்றும் ஷான் கிருஷ்ணசாமி ஆகியோரால் தொடங்கப்பட்டது FRESHDESK. சென்னையில் சில ஆண்டுகள் செயல்பட்ட நிலையில், அமெரிக்க பங்குச்சந்தையில் இடம் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கலிஃபோர்னியாவில் கால் பதித்தார் கிரிஷ் மாத்ருபூதம்.

FRESHDESK நிறுவனம், FRESHWORKS என பெயர்மாற்றப்பட்டு தனது சேவையை தொடர்ந்தது. அமெரிக்காவின் இரண்டாவது பெரிய பங்குச் சந்தையான நாஸ்டாக்கில் புதன்கிழமை பட்டியலிடப்பட்ட FRESHWORKS, தொடக்க பங்கு வெளியீட்டின் மூலம், பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து 73 ஆயிரத்து 700 கோடி ரூபாயை வசூலித்தது.

பங்கு ஒன்றின் விலை 2 ஆயிரத்து 600 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 30 சதவிகிதம் அதிகரித்து 3 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனையானது. அந்நிறுவனத்தின் பங்குதாரர்களான 500 ஊழியர்கள் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். இதில், 70 பேர் 30 வயதிற்குட்பட்டவர்கள்.

' isDesktop="true" id="568951" youtubeid="vVp6BJwL1Sg" category="business">

FRESHWORKS நிறுவனர் கிரிஷ் மாத்ருபூதம் கூறுகையில், “நாங்கள் தொடக்கத்தில் மூதலீடு செய்தவர்கள் மற்றும் தொடக்கத்தில் இணைந்த பணியாளர்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தோம். அவர்களின் கனவு நினைவாகியுள்ளது. தலைமை செயல் அதிகாரியாக எனக்கு திருப்தி அளிக்கிறது. முதலீட்டாளர்கள் மற்றும் பணியாளர்களின் கனவு நிறைவேறியுள்ளது. பொதுமக்களின் முதலீடு எனும் கூடுதல் பொறுப்பு வந்துள்ளது என்றார்.

FRESHWORKS-ல் பணியாற்றும் 75 சதவீதம் பேர், அந்நிறுவனத்தின பங்குதாரர்களாக உள்ளனர். இந்திய மென்பொருள் சேவை நிறுவனங்களில், நாஸ்டாக்கில் பட்டியலிடப்படும் முதல் நிறுவனம் FRESHWORKS ஆகும். தொடக்க பங்கு வெளியீட்டிற்கு முன் FRESHWORKS- நிறுவனத்தின் மதிப்பு 25 ஆயிரத்து 800 கோடி ரூபாயாக இருந்தது.

Girish Mathrubootham

ரஜினிக்கு நன்றி:

FRESHWORKS- நிறுவனத்தினை தொடங்கிய பின்னர் சென்னையிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து விட்டாலும் கூட கிரிஷ் எப்போதும் போலவே நடிகர் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகராகவே இருந்து வருகிறார். ரஜினி தனது மானசீக குரு என கூறும் கிரிஷ், அமெரிக்க பங்குச்சந்தையில் தனது நிறுவனத்தை பட்டியலிட செய்யும் திட்டத்துக்கு  ‘சூப்பர் ஸ்டார் திட்டம்’ என்றே பெயரிட்டிருந்தார்.

கபாலி, கோச்சடையான், லிங்கா என நடிகர் ரஜினியின் படங்கள் எப்போது ரிலீஸ் என்றாலும் சென்னையில் உள்ள திரையரங்குகளை மொத்தமாக தனது ஊழியர்களுக்காக முன் பதிவு செய்துவிடுவார்.  சில ஆண்டுகளுக்கு முன் இவருடைய நிறுவனத்துக்கு பதக்கம் ஒன்று கிடைத்த போது அந்த விழாவில் பேசிய கிரிஷ், தன்னுடைய கனவெல்லாம், தனது நிறுவனத்தை ரஜினியை பார்வையிட செய்வது மட்டுமே என்றார். இவரின் கனவு நனவாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

First published:

Tags: Business, News On Instagram, Rajini Kanth, Rajinikanth Fans