Home /News /business /

உங்கள் வாரிசுதாரருக்கு டெர்ம் இன்சூரன்ஸ் பலன் எளிதாக கிடைக்கச் செய்வதற்கான வழிமுறைகள் இதோ!

உங்கள் வாரிசுதாரருக்கு டெர்ம் இன்சூரன்ஸ் பலன் எளிதாக கிடைக்கச் செய்வதற்கான வழிமுறைகள் இதோ!

மாதிரி படம்

மாதிரி படம்

வாரிசுதாரர் கிளைம் பெற முயற்சிக்கும்போது, அவருக்கு வழிகாட்டுவதற்கு

நீங்கள் இல்லாத பட்சத்திலும் உங்கள் குடும்பத்துக்கான வாழ்க்கை சூழல், கனவுகள் மற்றும் லட்சியங்கள் உள்ளிட்ட எதுவும் கிடைக்காமல் போய்விடக் கூடாது என்பதன் நோக்கம் தான் டெர்ம் இன்சூரன்ஸ் செய்யக் காரணம் ஆகும்.

பொதுவாக டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தில் சேரும் மக்கள் இரண்டே விஷயங்களை தான் மனதில் எதிர்பார்க்கின்றனர். முதலாவதாக, தாம் இறக்கும் பட்சத்தில், தன்னுடைய வாரிசுதாரருக்கு முறையாக பணம் செலுத்தப்பட வேண்டும். இரண்டாவதாக அந்தப் பணம் எந்த சிக்கலும் இன்றி, எளிதாக கிடைக்க வேண்டும் என்பதே ஆகும். டெர்ம் இன்சூரன்ஸ் கிளைம் கிடைக்க வேண்டும் என்றால், இன்சூரன்ஸ் செய்பவர் குறித்த அனைத்து விவரங்களும் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்வதுடன், காலம் தவறாமல் ப்ரீமியம் செலுத்தியிருக்க வேண்டும்.

இதையெல்லாம், செய்தாலும் கூட, நீங்கள் கிளைம் பெற முயற்சிக்கும்போது மேலும் சில தடைகள் ஏற்படலாம். டெர்ம் இன்சூரன்ஸ் கிளைம் செய்வதில் பொதுவாக ஏற்படும் தடங்கல்கள் என்னென்ன, அவற்றை எதிர்கொள்ளாமல் உங்கள் குடும்பத்தினர் எளிதாகவும், விரைவாகவும் பணம் பெறுவதற்கான நடைமுறைகள் என்ன என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

அனைத்து ஆவணங்களையும் ஓரிடத்தில் வைக்க வேண்டும் :

என்னதான் நீங்கள் விவரம் மிகுந்தவராக இருந்தாலும், இயற்கையின் நியதிப்படி டெர்ம் இன்சூரன்ஸ் கிளைம் பெறுகையில் நீங்கள் இவ்வுலகில் உங்கள் குடும்பத்தாருக்கு துணையாக இருக்கப் போவதில்லை. ஆகவே, அனைத்து முக்கிய ஆவணங்களையும் ஒரே இடத்தில் வைக்கவும். உங்களுடைய இன்சூரன்ஸ் கிளைம் பெற போகும் வாரிசுதாரர் யார் என்பதை குடும்பத்தில் தெளிவாக கூற வேண்டும்.

உங்கள் இன்சூரன்ஸ் அக்கவுண்ட் மற்றும் வாரிசுதாரர் நியமனம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல் வடிவில் நீங்கள் சேமித்து வைக்கலாம்.

வாரிசுதாரரை தயார் நிலையில் வைத்திருக்கவும் :

வாரிசுதாரர் கிளைம் பெற முயற்சிக்கும்போது, அவருக்கு வழிகாட்டுவதற்கு நீங்கள் இருக்கப் போவதில்லை. ஆகவே, எப்படி கிளைம் பெற வேண்டும் என்ற நடைமுறையை முன்கூட்டியே வாரிசுதாரருக்கு சொல்லிக் கொடுங்கள். குறிப்பாக, யார் மூலமாக இந்த பாலிசி எடுத்தீர்களா அந்த முகவரின் தொடர்பு எண், பெயர் மற்றும் நிதி ஆலோசகர் ஒருவரது தொடர்பு விவரம் உள்ளிட்ட அனைத்தையும் உங்கள் வாரிசுதாரருக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தவும்.

கிளைம் தொகையின் பயன்பாடு குறித்து திட்டமிடவும் :

உங்கள் மறைவுக்கு பிறகு, திடீரென பெரிய தொகை உங்கள் வாரிசுதாரருக்கு கிடைக்கும் என்ற சூழலில், அவர் அப்போது அதை என்ன செய்வது என்று தெரியாமல், தவறான முதலீடுகள் மூலமாக பணத்தை வீணடிக்கக் கூடும். ஆகவே, பணம் அவருக்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதை திட்டமிடுங்கள். குடும்பத்தில் பெரும் கடன் இருப்பின், அந்த கடனை அடைப்பதற்கான வழிமுறையாக கிளைம் செட்டில்மெண்ட் அமைவதை உறுதி செய்யுங்கள். இதனால், உங்கள் வாரிசுதாரர் கடன் சுமையின்றி, நிம்மதியாக வாழ முடியும்.

Also read... பீம் யுபிஐ பேமெண்ட்ஸ் ஆப் வழியாக பணம் அனுப்புவது, பெறுவது எப்படி?

கடன் எதுவும் இல்லாத சூழலில், கிளைம் தொகையை தவணை முறையில் பெற்றுக் கொள்ளும் வழியை ஏற்படுத்துவது நல்லது. படிப்படியாக பணம் போய் சேருவதால், வாரிசுதாரர்கள் நிதானமாக திட்டமிட்டு வாழ முடியும்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Insurance

அடுத்த செய்தி