கொரோனா பாதிப்பால் பல தொழில்கள் நசிவடைந்த போதிலும் இந்தியாவில் குறிப்பாக இன்சூரன்ஸ் தொழில் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது. கோவிட் -19 தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்பு மற்றும் எப்போதுமே தனியார் மருத்துவமனைகளில் ஆகும் அதிக மருத்துவ செலவுகள் உள்ளிட்டவை தொடரும் இந்த கொரோனா பேரிடர் காலத்தில் அதிகமான இந்தியர்களை தனியார் ஹெல்த் இன்சூரன்ஸில் பதிவு செய்ய தூண்டின.
கோவிட்-19 காரணமாக மக்களின் ஆரோக்கியத்தை காக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கான தேவைகள் மட்டும் இல்லாமல் வேறு சில பாலிசிகளுக்கான தேவைகளும் தற்போதையை காலகட்டத்தில் அதிகரித்துள்ளது. சமீப காலத்தில் அதிகரித்துள்ள சில இன்சூரன்ஸ் பாலிஸிகள் பற்றி பார்க்கலாம்.
சைபர் இன்சூரன்ஸ்:
கடந்த 1 வருடத்திற்கும் மேலாக அச்சுறுத்தும் கொரோனா தொற்று காரணமாக நாட்டில் உள்ள நிறுவனங்கள் இன்னும் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலைகளை செய்து கொடுக்க தொடர்ந்து அனுமதித்து வருகின்றன. இதில் பல்வேறு நிறுவனங்கள் தரவு மீறல் மற்றும் வேறுசில ஆபத்துகள் மற்றும் இடையூறு ஏற்படும் அபாயத்திலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள சைபர் இன்சூரன்ஸை தேர்வு செய்கிறார்கள். வீட்டிலிருந்து ஊழியர்கள் வேலைபார்த்து வரும் இந்த சூழலில் பல சைபர் கிரைமினல்கள் குறிப்பாக நிறுவனங்களின் தரவை திருட அல்லது நிறுவனத்திடமிருந்து பணத்தை பறிக்க பயன்படுத்தக்கூடிய சில முக்கியமான டிஜிட்டல் ஆவணங்களை திருட குறி வைக்கின்றனர் என்று தொழில் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். முழு லாக்டவுன் சமயத்தின் போது பல பெரிய நிறுவனங்களும் ransomware மூலம் இப்படி குறிவைக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன என்று தொழில் கண்காணிப்பாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஹோம் இன்சூரன்ஸ்:
பேரழிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிப்போர் திடீர் மற்றும் எதிர்பாராத இழப்பிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள ஹோம் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது குறித்து பரிசீலிக்கலாம். வல்லுநர்களின் கூற்றுப்படி, நிலஅதிர்வெண் மற்றும் சேதத்தின் அளவு குறித்த நிச்சயமற்ற தன்மையுடன் கூடிய இயற்கை பேரழிவுகள் இந்தியாவில் ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளன. எனவே ஹோம் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து வைத்து கொள்வது மிகப்பெரிய நன்மைகளை தரும் என்பது வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.
பயன்பாட்டு அடிப்படையிலான மோட்டார் இன்சூரன்ஸ் ( Pay-as-you-use Insurance )
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில், பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்காக Pay As You Drive கொள்கைகளை அறிமுகப்படுத்தி உள்ளன. இந்த தனித்துவமான பயன்பாட்டு அடிப்படையிலான மோட்டார் காப்பீடு, ‘Pay As You Drive’ என பிரபலமாக அறியப்படுகிறது. வாடிக்கையாளர்கள் எத்தனை கிலோ மீட்டர் கார் பயணம் செய்தார்கள் என்பதைப் பொறுத்து பிரீமியம் தொகையை செலுத்தி கொள்ள அனுமதிக்கிறது. பல வாகனங்களை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு இது மிகவும் பொருத்தமான இன்சூரன்ஸாக இருக்கும். ஒரே நேரத்தில் எல்லா வாகனங்களையும் பயன்படுத்தும் வாய்ப்பு குறைவு என்பதால் அவர்கள் பெரிய அளவில் பிரீமியம் தொகையை செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. மேலும் உங்களிடம் கார் இருந்தும் நீங்கள் பெரும்பாலும் பொது போக்குவரத்தை நம்பியிருந்தால் அல்லது சில மருத்துவ சிக்கல்களால் உங்கள் வாகனங்களை எப்போதாவது தான் பயன்படுத்துகிறீர்கள் என்றால், இந்த இன்சூரன்ஸ் பாலிஸியானது உங்கள் வாகன காப்பீட்டிற்கான செலவை குறைக்க உதவும்.
Also read... PPF முதல் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் வரை - தற்போது வழங்கப்படும் வட்டி என்ன?
பைட் சைஸ் இன்சூரன்ஸ் ( Bite-size insurance)
ஒரு விரிவான காப்பீட்டுத் தொகையுடன் ஒப்பிடும்போது, இந்தக் கொள்கைகள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட தேவை மற்றும் நிபந்தனைக்குரியவை. குறைந்த பிரீமியம் மற்றும் குறைந்த பாதுகாப்பு கொண்டது. சிறிய டிக்கெட் இன்சூரன்ஸ் கவர் அல்லது பைட் சைஸ் இன்சூரன்ஸ் என்றழைக்கப்படுகிறது. இதற்கு உதாரணம் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் ரயில் டிக்கெட்டுடன் வாடிக்கையாளர் பெறும் இன்சூரன்ஸ். இது ஒரு பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தால் ஆதரிக்கப்படுகிறது.இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் இன்சூரன்ஸ் தொழில்நுட்ப நிறுவனங்கள் லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் பொது இன்சூரன்ஸ் ஆகிய இரண்டிற்கும் இடையே ஒரு இணைப்பு இன்சூரன்ஸை உருவாக்குகின்றன. இருப்பினும் தற்போது இது சுகாதாரம், பயணம், வீட்டு உபகரணங்கள் மற்றும் வாழ்க்கை முறை தேவைகள் போன்ற பொது இன்சூரன்ஸ் வகைகளில் கவனம் செலுத்துகிறது.
தவிர டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்களிலிருந்து, கிரெடிட் கார்டு பாதுகாப்பு, விமான தாமதம், ஒரு விளையாட்டில் பங்கேற்பதில் ஏற்படும் தனிப்பட்ட விபத்து, பட்டாசு விபத்து, அவசர மருத்துவமனை கேஷ், சைபர் பாதுகாப்பு போன்றவற்றுக்கும் மிக குறைந்த பிரீமியம் தொகையில் விற்பனை செய்யப்படுகின்றன.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Insurance