இன்றைய நிலையில் கடன் கொடுக்கும் நிறுவனங்கள், வங்கிகள் அனைத்துமே ஒருவருக்கு கடன் கொடுப்பதற்கு முன்பு அவர்களது கிரெடிட் ப்ரொபைல் என்று அழைக்க கூடிய அவர்களின் விவரங்களைப் பற்றி முழுவதும் தெரிந்து கொண்ட பிறகு கடன் கொடுக்கிறார்கள்.
அந்த கிரெடிட் ப்ரொபைலில் ஒரு தனிப்பட்ட நபர் எவ்வளவு கடன் வாங்கி இருக்கிறார் எவ்வளவு திருப்பி செலுத்தி இருக்கிறார் என்பது போன்ற முழு விவரங்கள் இருக்கும். அதில் உங்களது விவரங்கள், நீங்கள் வாங்கிய கடனுக்கான வரலாறு, கடனுக்காக நீங்கள் மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் திருப்பி செலுத்த வேண்டிய கடன் ஆகிய நான்கு பகுதிகள் மிகவும் முக்கியமானதாக இருக்கின்றன. வாங்கிய கடனை நீங்கள் திருப்பி செலுத்தும் விதத்தில் பொறுத்து உங்களது சிபில் ஸ்கோர் ஆனது மாறுபடும்.
கடன் கொடுக்கும் நிறுவனங்கள் கடன் கொடுப்பதற்கு முன்பு உங்களது கிரெடிட் ப்ரொபைலை முழுவதும் ஆராய்ந்த பின்னரே அதனை கொடுக்கிறார்கள். அது போன்ற காரணங்களுக்காகவே உங்களது கிரேடிட் ப்ரோபைலை பாதுகாப்பாக வைத்துக் கொண்டிருக்க வேண்டியது அவசியம். மிக பாதுகாப்பான கிரடிட் ப்ரோபைலை கட்டமைக்க பின்பற்ற வேண்டிய நான்கு வழிகளை பற்றி இப்போது பார்ப்போம்.
தேவையற்ற கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்:
இன்றைய நிலையில் சில நிறுவனங்கள் உங்களது பின்புலம் எதையும் தெரிந்து கொள்ளாமலேயே கடன் கொடுக்க முன் வருகிறார்கள். இதன் காரணமாக அதிக அளவு கடன் வாங்கி அவை மிகப்பெரும் தொகையாக உருவெடுத்து உங்களால் திருப்பி செலுத்த முடியாத அளவிற்கு சென்று விடும். இதன் காரணமாக உங்களது கிரெடிட் ப்ரொபைல் மீது எதிர்மறை எண்ணம் உருவாக்கும். எனவே முடிந்த அளவு தேவைக்கு அதிகமாகவும் அல்லது தகுதிக்கு மீறியோ கடன் வாங்காமல் சரியான பாதுகாப்பாக இருப்பது நல்லது.
நீண்ட காலம் மாத தவணைகளில் சிக்கிக் கொள்ளாமல் இருத்தல்:
முடிந்த அளவு கிரெடிட் கார்டுகள் அல்லது மாத தவணையில் பொருட்களை வாங்கும் போது நீண்டகால அடிப்படையில் வாங்குவதை தவிர்த்தல் வேண்டும். ஏனெனில் நீங்கள் தெரியாமல் ஒரு முறை உங்கள் தவணையை செலுத்த தவறினால் கூட உங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அதிக தொகையை செலுத்தும் படி நேரிடும்.
Also Read : பட்ஜெட் 2023: வரி விலக்கு வரம்பு உயர்வு முதல் வேலைவாய்ப்புகள் வரை!
கிரெடிட் கார்டு என்னும் பொறி:
முடிந்த அளவு கிரெடிட் கார்டு பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. கிரெடிட் கார்டுகளால் பல்வேறு நன்மைகள் இருந்தாலும் உங்களது மாத கடன்களை சரியாக செலுத்துகிறீர்களா என்பது முக்கியமான விஷயம். இன்றைய நிலையில் கிரெடிட் கார்டுகளை வைத்து பல்வேறு விதமான. மோசடிகள் நடக்கும் சமயத்தில் தேவையற்ற பொருட்களையும் நீங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே முடிந்த அளவு தேவையற்ற இடங்களில் கிரெடிட் கார்டு பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
உங்கள் அடையாளங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்:
சமீபத்தில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள நிலையில் உங்களது தனிப்பட்ட அடையாளங்களை வைத்து மற்றவர்கள் உங்களது கணக்கில் போலியாக கடன் வாங்கும் மோசடிகளும் நடந்து வருகிறது. பிஷ்ஷிங் எனப்படும் இந்த மோசடியில் சிக்கிக் கொள்ளாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். எப்போதும் ஒரு முறைக்கு இருமுறை உங்களது பண பரிமாற்றங்களை சரி பார்ப்பது, நீங்கள் செய்யாத பணப்பரிவர்த்தனைகள் ஏதேனும் உங்களது கணக்கிலிருந்து நிகழ்ந்திருந்தால் அதனை உடனடியாக புகாரளிக்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank Loan, Credit Card, Personal Loan