வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே தொழிலாளர்கள் வேலை செய்யலாம் என்ற திட்டத்தை விரைவில் மத்திய அரசு கொண்டுவர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனால் தொழிலாளர்களின் ஊதியம், அவர்கள் வேலை செய்யும் நேரம் ஆகியவை மாற்றப்படலாம்
பணியாளர்கள் வேலை செய்யும் நாட்கள், நேரம் போன்றவை நாட்டுக்கு நாடு மாறுபடுகின்றன. இந்தியாவில் தற்போது அனைத்து நிறுவனங்களிலும் தினமும் 8 மணி நேர வேலை, வாரத்திற்கு 48 மணி நேரம் என 6 நாட்கள் ஊழியர்கள் வேலை செய்ய வேண்டும் என்ற நடைமுறை அமலில் இருக்கின்றது. ஒருசில ஐரோப்பிய நாடுகள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே அதுவும் 40 மணி நேரத்துக்கும் குறைவாக வேலை என்னும் முன்னெடுப்பை முயற்சித்து வருகின்றன.
இந்நிலையில், தொழிலாளர்களின் ஊதியம், சமூகப் பாதுகாப்பு, தொழில்தொடர்பு, பணி நிரந்தரம், சுகாதாரம் மற்றும் பணிச்சூழல் போன்றவற்றில் நான்கு முக்கிய அம்சங்களைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவிலும் வாரத்தில் 4 நாட்கள் வேலை, மூன்று நாட்கள் விடுமுறை என்னும் திட்டத்தை 2022ம் நிதி ஆண்டின் தொடக்கத்தில் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக பிடிஐ ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், புதிய வேலைநாள் தொடர்பான விதிகளை மத்திய அரசு ஏற்கனவே முடிவு செய்துவிட்டது. தொழிலாளர் நலன் மத்திய,மாநில அரசுகள் தொடர்பானது என்பதால் மா நிலங்கள், இந்த புதிய கொள்கைகளை பரிசீலித்து, தங்களுக்கு ஏற்ற வகையில் விதிமுறைகளை வகுத்துக்கொள்ள வேண்டியதுதான் பாக்கி. 2022-23 நிதியாண்டில் இதனை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: EPFO : பிஎஃபில் வந்திருக்கும் ஏக்கப்பட்ட மாற்றங்கள்.. இதையெல்லாம் நீங்கள் செய்துவிட்டீர்களா?
இது தொடர்பாக உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, அருணாச்சல் பிரதேசம், ஹரியானா, ஜார்கண்ட், பஞ்சாப், மணிப்பூர், பீகார், ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய 13 மாநிலங்கள் மாதிரி விதிகளை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டால் இந்தியாவில் வேலை சூழல் புதிய மாற்றத்தை சந்திக்கும். ஊழியர்கள் பணி செய்யும் நேரம், அவர்களது ஊதியம் ஆகியவற்றில் மாற்றம் ஏற்படக்கூடும்.
மேலும் படிங்க: 2022-ல் அதிக ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ள ஐடி மற்றும் டெலிகாம் நிறுவனங்கள்!
gratuity மற்றும் பி.ஃப் ஆகியவற்றுக்கு கூடுதல் நிதி பங்களிப்பு செலுத்த வேண்டும் என்பதால் தொழிலாளர்களின் கையில் கிடைக்கும் ஊதியம் குறையக்கூடும். வேலை நாட்கள் குறைக்கப்பட்டாலும், தினசரி பணி நேரம் அதிகமாக இருக்கும். நாள்தோறும் பணியாற்றும் நேரம் 12 மணி நேரம் வரை நீட்டிக்கப்படும். இதனால் வாரத்திற்கு 48 மணி நேரம் என பணியாற்ற வேண்டிய அதே நிலையே தொடரும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central government, Work