மாருதி முன்னாள் எம்.டி. மீது வங்கி கடன் மோசடி வழக்கு

கட்டார் மாருதி உத்யோக் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக 1993 முதல் 2007-ம் ஆண்டு வரையில் பணியாற்றி உள்ளார்.

மாருதி முன்னாள் எம்.டி. மீது வங்கி கடன் மோசடி வழக்கு
ஜகதீஷ் கட்டார்
  • News18
  • Last Updated: December 24, 2019, 7:02 PM IST
  • Share this:
மாருதி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜகதீஷ் கட்டார் 110 கோடி வங்கிக் கடன் மோசடி செய்துள்ளதாக சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு 110 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்திய குற்றத்துக்காக சிபிஐ ஜகதீஷ் கட்டார் மற்றும் கார்னேஷன் ஆட்டோ நிறுவனம் ஆகியோரின் பெயரில் வழக்குப் பதிவு செய்துள்ளது. நேற்று மாலை ஜெகதீஷ் கட்டார் மற்றும் அவர் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.

கட்டார் மாருதி உத்யோக் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக 1993 முதல் 2007-ம் ஆண்டு வரையில் பணியாற்றி உள்ளார். பணி ஓய்வு பெற்ற பின்னர் கார்னேஷன் என்னும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இதற்காக 2009-ம் ஆண்டு 170 கோடி ரூபாய் வங்கிக்கடன் வாங்கியுள்ளார். ஆனால், 2015-ல் இந்தக் கடன் செயல்படாத சொத்தாக அறிவிக்கப்பட்டது.


ஆக, வங்கிக்கடனை தொழில் செய்ய வாங்கி அதை சொந்தக் காரணங்களுக்குப் பயன்படுத்தி ஏமாற்றிய குற்றத்துக்காகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் ரகசியம் காக்கப்படும்- மத்திய அரசு
First published: December 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்