CARS24 நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள தோனி... நிறுவனத்தின் தூதர் ஆகவும் முடிவு!

ஒப்பந்த அடிப்படையில் பங்குதாரராக இணையும் தோனி, CARS24 நிறுவனத்தின் தூதராகவும் பொறுப்பேற்பார் எனக் கூறப்படுகிறது.

CARS24 நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள தோனி... நிறுவனத்தின் தூதர் ஆகவும் முடிவு!
தோனி
  • News18
  • Last Updated: August 13, 2019, 6:37 PM IST
  • Share this:
முன்னாள் இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் மஹிந்திர சிங் தோனி, தொழில்நுட்ப அடிப்படையிலான கார் நிறுவனமான CARS24 நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

ஒப்பந்த அடிப்படையில் பங்குதாரராக இணையும் தோனி, CARS24 நிறுவனத்தின் தூதராகவும் பொறுப்பேற்பார் எனக் கூறப்படுகிறது. ஒப்பந்த விவரங்கள் எதுவும் இதுவரையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

இதுகுறித்து CARS24 நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் நிர்வாக தலைமை இயக்குநர் விக்ரம் சோப்ரா கூறுகையில், “தோனியின் தொடர் தேடல்கள், கண்டுபிடிப்புகள் ஆகியவைதான் அவரின் வளர்ச்சிக்கும் அவர் மீது தொடுக்கப்படும் சவால்களுக்கு விடைகளாகவும் உள்ளன. இதனாலே இந்தியக் கிரிக்கெட் வரலாற்றின் அதிகம் கொண்டாடப்பட்ட கேப்டனாக அவர் உள்ளார்” என்றார்.


கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட CARS24 நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய கார் வாங்கும், விற்கும் தளமாக உள்ளது. கார்களை எளிதாக விற்கவும் பயன்படுத்திய கார்களை வாங்கவும் CARS24 உதவுகிறது. இரண்டாம் தர நகரங்களில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் விரிவடைவதைக் குறிக்கோளாக இந்நிறுவனம் கொண்டுள்ளது.

தற்போது 35 நகரங்களில் 155-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டுள்ள CARS24 நிறுவனத்தில் சீகோயா இந்தியா, எக்ஸார் சீட்ஸ், டிஎஸ்டி க்ளோபல், கிங்ஸ்வே கேபிட்டல் மற்றும் கேசிகே ஆகியோர் முதலீட்டாளர்களாக உள்ளனர்.

மேலும் பார்க்க: மார்ச் 2021-ல் கடனே இல்லாத நிறுவனமாக ரிலையன்ஸ் உருவாகும் - முகேஷ் அம்பானி உத்தரவாதம்
First published: August 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்